1
கொல்லை யேற்றினர் கோளர வத்தினர்தில்லைச் சிற்றம் பலத்துறைச் செல்வனார்தொல்லை யூழியர் சோற்றுத் துறையர்க்கேவல்லை யாய்ப்பணி செய்மட நெஞ்சமே.
சொற்பிரிப்பு
கொல்லை ஏற்றினர் கோள் அரவத்தினர்,தில்லைச் சிற்றம்பலத்து உறை செல்வனார்,தொல்லை ஊழியர் சோற்றுத் துறையர்க்கேவல்லையாய்ப் பணி செய், மட நெஞ்சமே!
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.