திருமுறை 5 · 5.032 · 10

திருப்பூந்துருத்தி

அருளியவர்
திருநாவுக்கரசர்
பண்
திருக்குறுந்தொகை
தலம்
பூந்துருத்தி
நாடு
சோழநாடு காவிரித் தென்கரை

1

கொடிகொள் செல்வ விழாக்குண லையறாக்கடிகொள் பூம்பொழிற் கச்சியே கம்பனார்பொடிகள் பூசிய பூந்துருத் திந்நகர்அடிகள் சேவடிக் கீழ்நா மிருப்பதே.
சொற்பிரிப்பு
கொடிகொள் செல்வ விழாக்குணலை அறாக்கடிகொள் பூம்பொழில் கச்சி ஏகம்பனார்,பொடிகள் பூசிய பூந்துருத்தி நகர்அடிகள், சேவடிக் கீழ் நாம் இருப்பதே!
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

2

ஆர்த்த தோலுடை கட்டியோர் வேடனாய்ப்பார்த்த னோடு படைதொடு மாகிலும்பூத்த நீள்பொழிற் பூந்துருத் திந்நகர்த்தீர்த்தன் சேவடிக் கீழ்நா மிருப்பதே.
சொற்பிரிப்பு
ஆர்த்த தோல் உடை கட்டி ஓர் வேடனாய்ப்பார்த்தனோடு படைதொடும் ஆகிலும்,பூத்த நீள்பொழில் பூந்துருத்தி நகர்த்தீர்த்தன் சேவடிக் கீழ் நாம் இருப்பதே!
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

3

மாதி னைமதித் தானொரு பாகமாக்காத லாற்கரந் தான்சடைக் கங்கையைப்பூத நாயகன் பூந்துருத் திந்நகர்க்காதி சேவடிக் கீழ்நா மிருப்பதே.
சொற்பிரிப்பு
மாதினை மதித்தான், ஒரு பாகமாக்;காதலால் கரந்தான், சடைக் கங்கையைப்;பூத நாயகன் பூந்துருத்தி நகர்க்குஆதி; சேவடிக் கீழ் நாம் இருப்பதே!
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

4

மூவ னாய்முத லாயிவ் வுலகெலாங்காவ னாய்க்கடுங் காலனைக் காய்ந்தவன்பூவின் நாயகன் பூந்துருத் திந்நகர்த்தேவன் சேவடிக் கீழ்நா மிருப்பதே.
சொற்பிரிப்பு
மூவனாய், முதலாய் இவ் உலகு எலாம்காவனாய்க், கடுங் காலனைக் காய்ந்தவன்;பூவின் நாயகன் பூந்துருத்தி நகர்த்தேவன்; சேவடிக் கீழ் நாம் இருப்பதே!
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

5

செம்பொ னேயொக்கும் மேனியன் தேசத்தில்உம்ப ராரவ ரோடங் கிருக்கிலும்பொன்பொ னார்செல்வப் பூந்துருத் திந்நகர்நம்பன் சேவடிக் கீழ்நா மிருப்பதே.
சொற்பிரிப்பு
செம்பொனே ஒக்கும் மேனியன்; தேசத்தில்உம்பரார் அவரோடு அங்கு இருக்கிலும்,பொன் பொன்னார் செல்வப் பூந்துருத்தி நகர்நம்பன்; சேவடிக் கீழ் நாம் இருப்பதே!
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

6

வல்லம் பேசி வலிசெய்மூன் றூரினைக்கொல்லம் பேசிக் கொடுஞ்சரம் நூறினான்புல்லம் பேசியும் பூந்துருத் திந்நகர்ச்செல்வன் சேவடிக் கீழ்நா மிருப்பதே.
சொற்பிரிப்பு
வல்லம் பேசி வலிசெய் மூன்று ஊரினைக்கொல்லம் பேசிக் கொடுஞ்சரம் நூறினான்-புல்லம் பேசியும் பூந்துருத்தி நகர்ச்செல்வன்; சேவடிக் கீழ் நாம் இருப்பதே!
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

7

ஒருத்த னாயுல கேழுந் தொழநின்றுபருத்த பாம்பொடு பான்மதி கங்கையும்பொருத்த னாகிலும் பூந்துருத் திந்நகர்த்திருத்தன் சேவடிக் கீழ்நா மிருப்பதே.
சொற்பிரிப்பு
ஒருத்தனாய் உலகு ஏழும் தொழ நின்றுபருத்த பாம்பொடு பால்மதி கங்கையும்பொருத்தன் ஆகிலும் பூந்துருத்தி நகர்த்திருத்தன் சேவடிக் கீழ் நாம் இருப்பதே!
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

8

அதிரர் தேவர் இயக்கர் விச்சாதரர்கருத நின்றவர் காண்பரி தாயினான்பொருத நீர்வரு பூந்துருத் திந்நகர்ச்சதுரன் சேவடிக் கீழ்நா மிருப்பதே.
சொற்பிரிப்பு
அதிரர் தேவர் இயக்கர் விச்சாதரர்கருத நின்றவர் காண்பு அரிது ஆயினான்,பொருத நீர் வரு பூந்துருத்தி நகர்ச்சதுரன், சேவடிக் கீழ் நாம் இருப்பதே!
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

9

செதுக றாமனத் தார்புறங் கூறினுங்கொதுக றாக்கண்ணி னோன்பிகள் கூறினும்பொதுவின் நாயகன் பூந்துருத் திந்நகர்க்கதிபன் சேவடிக் கீழ்நா மிருப்பதே.
சொற்பிரிப்பு
செதுகு அறா மனத்தார் புறம் கூறினும்,கொதுகு அறாக் கண்ணின் நோன்பிகள் கூறினும்,-பொதுவின் நாயகன் பூந்துருத்தி நகர்க்குஅதிபன் சேவடிக் கீழ் நாம் இருப்பதே!
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

10

துடித்த தோள்வலி வாளரக் கன்றனைப்பிடித்த கைஞ்ஞெரிந் துற்றன கண்ணெலாம்பொடிக்க வூன்றிய பூந்துருத் திந்நகர்ப்படிகொள் சேவடிக் கீழ்நா மிருப்பதே.
சொற்பிரிப்பு
துடித்த தோள் வலி வாள் அரக்கன் தனைப்பிடித்த கைஞ் ஞெரிந்து உற்றன, கண் எலாம்பொடிக்க ஊன்றிய பூந்துருத்தி நகர்ப்படிகொள்,சேவடிக் கீழ் நாம் இருப்பதே!
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.