1
கோனைக் காவிக் குளிர்ந்த மனத்தராய்த்தேனைக் காவியுண் ணார்சில தெண்ணர்கள்ஆனைக் காவிலெம் மானை அணைகிலார்ஊனைக் காவி யுழிதர்வர் ஊமரே.
சொற்பிரிப்பு
கோனைக் காவிக் குளிர்ந்த மனத்தராய்த்தேனைக் காவி உண்ணார், சில தெண்ணர்கள்;ஆனைக்காவில் எம்மானை அணைகிலார்,ஊனைக் காவி உழிதர்வர், ஊமரே.
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.