திருமுறை 5 · 5.030 · 11

திருப்பராய்த்துறை

அருளியவர்
திருநாவுக்கரசர்
பண்
திருக்குறுந்தொகை
தலம்
பராய்த்துறை
நாடு
சோழநாடு காவிரித் தென்கரை

1

கரப்பர் கால மடைந்தவர் தம்வினைசுருக்கு மாறுவல் லார்கங்கை செஞ்சடைப்பரப்பு நீர்வரு காவிரித் தென்கரைத்திருப்ப ராய்த்துறை மேவிய செல்வரே.
சொற்பிரிப்பு
கரப்பர், காலம் அடைந்தவர் தம் வினை;சுருக்கும் ஆறு வல்லார், கங்கை செஞ்சடைப்;பரப்பு நீர் வரு காவிரித் தென்கரைத்திருப்பராய்த்துறை மேவிய செல்வரே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

2

மூடி னார்களி யானையின் ஈருரிபாடி னார்மறை நான்கினோ டாறங்கஞ்சேட னார்தென் பராய்த்துறைச் செல்வரைத்தேடிக் கொண்டடி யேன்சென்று காண்பனே.
சொற்பிரிப்பு
மூடினார், களி யானையின் ஈர் உரி;பாடினார், மறை நான்கினோடு ஆறு அங்கம்;சேடனார்; தென் பராய்த்துறைச் செல்வரைத்தேடிக்கொண்டு அடியேன் சென்று காண்பனே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

3

பட்ட நெற்றியர் பால்மதிக் கீற்றினர்நட்ட மாடுவர் நள்ளிருள் ஏமமுஞ்சிட்ட னார்தென் பராய்த்துறைச் செல்வனார்இட்ட மாயிருப் பாரை அறிவரே.
சொற்பிரிப்பு
பட்ட நெற்றியர் பால்மதிக் கீற்றினர்;நட்டம் ஆடுவர் நள்இருள் ஏமமும்;சிட்டனார் தென் பராய்த்துறைச் செல்வனார்;இட்டமாய் இருப்பாரை அறிவரே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

4

முன்பெ லாஞ்சில மோழைமை பேசுவர்என்பெ லாம்பல பூண்டங் குழிதர்வர்தென்ப ராய்த்துறை மேவிய செல்வனார்அன்ப ராயிருப் பாரை அறிவரே.
சொற்பிரிப்பு
முன்பு எலாம் சில மோழைமை பேசுவர்,என்பு எலாம் பல பூண்டு, அங்கு உழிதர்வர்-தென்பராய்த்துறை மேவிய செல்வனார்;அன்பராய் இருப்பாரை அறிவரே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

5

போது தாதொடு கொண்டு புனைந்துடன்தாத விழ்சடைச் சங்கரன் பாதத்துள்வாதை தீர்க்கவென் றேத்திப் பராய்த்துறைச்சோதி யானைத் தொழுதெழுந் துய்ம்மினே.
சொற்பிரிப்பு
போது தாதொடு கொண்டு, புனைந்துஉடன்தாதுஅ விழ்சடைச் சங்கரன் பாதத்துள்,வாதை தீர்க்க! என்று ஏத்திப், பராய்த்துறைச்சோதி யானைத் தொழுது,எழுந்து, உய்ம்மினே!
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

6

நல்ல நான்மறை யோதிய நம்பனைப்பல்லில் வெண்டலை யிற்பலி கொள்வனைத்தில்லை யான்றென் பராய்த்துறைச் செல்வனைவல்லை யாய்வணங் கித்தொழு வாய்மையே.
சொற்பிரிப்பு
நல்ல நால்மறை ஓதிய நம்பனைப்,பல் இல் வெண்தலையில் பலி கொள்வனைத்,தில்லையான், தென் பராய்த்துறைச் செல்வனை,வல்லையாய் வணங்கித் தொழு, வாய்மையே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

7

நெருப்பி னாற்குவித் தாலொக்கு நீள்சடைப்பருப்ப தம்மத யானை யுரித்தவன்திருப்ப ராய்த்துறை யார்திரு மார்பின்நூல்பொருப்ப ராவி இழிபுனல் போன்றதே.
சொற்பிரிப்பு
நெருப்பினால், குவித்தால் ஒக்கும், நீள்சடைப்;பருப்பதம் மத யானை உரித்தவன்,திருப்பராய்த்துறையார், திருமார்பின் நூல்பொருப்பு அராவி இழி புனல் போன்றதே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

8

எட்ட விட்ட இடுமண லெக்கர்மேற்பட்ட நுண்டுளி பாயும் பராய்த்துறைச்சிட்டன் சேவடி சென்றடை கிற்றிரேல்விட்டு நம்வினை யுள்ளன வீடுமே.
சொற்பிரிப்பு
எட்ட இட்ட இடுமணல் எக்கர் மேல்பட்ட நுண்துளி பாயும் பராய்த்துறைச்சிட்டன் சேவடி சென்று அடைகிற்றிரேல்,விட்டு, நம் வினை உள்ளன வீடுமே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

9

நெருப்ப ராய்நிமிர்ந் தாலொக்கு நீள்சடைமருப்ப ராய்வளைத் தாலொக்கும் வாண்மதிதிருப்ப ராய்த்துறை மேவிய செல்வனார்விருப்ப ராயிருப் பாரை அறிவரே.
சொற்பிரிப்பு
நெருப்பு அராய் நிமிர்ந்தால் ஒக்கும் நீள்சடை;மருப்பு அராய் வளைத்தால் ஒக்கும், வாள்மதி;திருப்பராய்த்துறை மேவிய செல்வனார்விருப்பராய் இருப்பாரை அறிவரே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

10

தொண்டு பாடியுந் தூமலர் தூவியும்இண்டை கட்டி இணையடி யேத்தியும்பண்ட ரங்கர் பராய்த்துறைப் பாங்கரைக்கண்டு கொண்டடி யேனுய்ந்து போவனே.
சொற்பிரிப்பு
தொண்டு பாடியும் தூமலர் தூவியும்,இண்டை கட்டி இணைஅடி ஏத்தியும்,பண்டரங்கர் பராய்த்துறைப் பாங்கரைக்கண்டு கொண்டு அடியேன் உய்ந்து போவனே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

11

அரக்கன் ஆற்றல் அழித்த அழகனைப்பரக்கு நீர்ப்பொன்னி மன்னு பராய்த்துறைஇருக்கை மேவிய ஈசனை யேத்துமின்பொருக்க நும்வினை போயறுங் காண்மினே.
சொற்பிரிப்பு
அரக்கன் ஆற்றல் அழித்த அழகனைப்,பரக்கும் நீர்ப் பொன்னி மன்னு பராய்த்துறைஇருக்கை மேவிய ஈசனை, ஏத்துமின்!பொருக்க, நும் வினை போய் அறும்; காண்மினே!
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.