திருமுறை 5 · 5.028 · 10

திருவையாறு

அருளியவர்
திருநாவுக்கரசர்
பண்
திருக்குறுந்தொகை
தலம்
ஐயாறு
நாடு
சோழநாடு காவிரி வடகரை

1

சிந்தை வண்ணத்த ராய்த்திறம் பாவணம்முந்தி வண்ணத்த ராய்முழு நீறணிசந்தி வண்ணத்த ராய்த்தழல் போல்வதோர்அந்தி வண்ணமு மாவர்ஐ யாறரே.
சொற்பிரிப்பு
சிந்தை வண்ணத்தராய்த், திறம்பா வணம்முந்தி வண்ணத்தராய், முழு நீறு அணிசந்தி வண்ணத்தராய்த், தழல் போல்வது ஓர்அந்தி வண்ணமும், ஆவர் ஐயாறரே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

2

மூல வண்ணத்த ராய்முத லாகியகோல வண்ணத்த ராகிக் கொழுஞ்சுடர்நீல வண்ணத்த ராகி நெடும்பளிங்கால வண்ணத்த ராவர்ஐ யாறரே.
சொற்பிரிப்பு
மூல வண்ணத்தராய், முதல்ஆகியகோல வண்ணத்தர் ஆகிக், கொழுஞ்சுடர்நீல வண்ணத்தர் ஆகி, நெடும்பளிங்குஆல வண்ணத்தர் ஆவர் ஐயாறரே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

3

சிந்தை வண்ணமுந் தீயதோர் வண்ணமும்அந்திப் போதழ காகிய வண்ணமும்பந்திக் காலனைப் பாய்ந்ததொர் வண்ணமும்அந்தி வண்ணமு மாவர்ஐ யாறரே.
சொற்பிரிப்பு
சிந்தை வண்ணமும், தீயது ஓர் வண்ணமும்,அந்திப் போது அழகு ஆகிய வண்ணமும்,பந்திக் காலனைப் பாய்ந்ததோர் வண்ணமும்,அந்தி வண்ணமும் ஆவர் ஐயாறரே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

4

இருளின் வண்ணமு மேழிசை வண்ணமுஞ்சுருளின் வண்ணமுஞ் சோதியின் வண்ணமும்மருளு நான்முகன் மாலொடு வண்ணமும்அருளும் வண்ணமு மாவர்ஐ யாறரே.
சொற்பிரிப்பு
இருளின் வண்ணமும் ஏழ்இசை வண்ணமும்,சுருளின் வண்ணமும், சோதியின் வண்ணமும்,மருளும் நான்முகன் மாலொடு வண்ணமும்,அருளும் வண்ணமும் ஆவர் ஐயாறரே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

5

இழுக்கின் வண்ணங்க ளாகிய வெவ்வழல்குழைக்கும் வண்ணங்க ளாகியுங் கூடியும்மழைக்கண் மாமுகி லாகிய வண்ணமும்அழைக்கும் வண்ணமு மாவர்ஐ யாறரே.
சொற்பிரிப்பு
இழுக்கின் வண்ணங்கள் ஆகிய வெவ்அழல்குழைக்கும் வண்ணங்கள் ஆகியும் கூடியும்,மழைக்கண் மாமுகில் ஆகிய வண்ணமும்,அழைக்கும் வண்ணமும் ஆவர் ஐயாறரே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

6

இண்டை வண்ணமும் ஏழிசை வண்ணமுந்தொண்டர் வண்ணமுஞ் சோதியின் வண்ணமுங்கண்ட வண்ணங்க ளாய்க்கனல் மாமணிஅண்ட வண்ணமு மாவர்ஐ யாறரே.
சொற்பிரிப்பு
இண்டை வண்ணமும் ஏழ்இசை வண்ணமும்,தொண்டர் வண்ணமும் சோதியின் வண்ணமும்,கண்ட வண்ணங்கள் ஆய்க் கனல் மாமணிஅண்ட வண்ணமும் ஆவர் ஐயாறரே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

7

விரும்பும் வண்ணமும் வேதத்தின் வண்ணமுங்கரும்பின் இன்மொழிக் காரிகை வண்ணமும்விரும்பு வார்வினை தீர்த்திடும் வண்ணமும்அரும்பின் வண்ணமு மாவர்ஐ யாறரே.
சொற்பிரிப்பு
விரும்பும் வண்ணமும் வேதத்தின் வண்ணமும்,கரும்பின் இன்மொழிக் காரிகை வண்ணமும்,விரும்புவார் வினை தீர்த்திடும் வண்ணமும்,அரும்பின் வண்ணமும் ஆவர் ஐயாறரே
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

8

ஊழி வண்ணமும் ஒண்சுடர் வண்ணமும்வேழ ஈருரி போர்த்ததோர் வண்ணமும்வாழித் தீயுரு வாகிய வண்ணமும்ஆழி வண்ணமு மாவர்ஐ யாறரே.
சொற்பிரிப்பு
ஊழி வண்ணமும் ஒண்சுடர் வண்ணமும்,வேழ ஈர் உரி போர்த்ததோர் வண்ணமும்,வாழித் தீ உரு ஆகிய வண்ணமும்,ஆழி வண்ணமும் ஆவர் ஐயாறரே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

9

செய்த வன்றிரு நீறணி வண்ணமும்எய்த நோக்கரி தாகிய வண்ணமுங்கைது காட்சி யரியதோர் வண்ணமும்ஐது வண்ணமு மாவர்ஐ யாறரே.
சொற்பிரிப்பு
செய்தவன் திருநீறு அணி வண்ணமும்,எய்த நோக்க அரிது ஆகிய வண்ணமும்,கைது காட்சி அரியதோர் வண்ணமும்,ஐது வண்ணமும் ஆவர் ஐயாறரே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

10

எடுத்த வாளரக் கன்றிறல் வண்ணமும்இடர்க்கள் போல்பெரி தாகிய வண்ணமுங்கடுத்த கைந்நரம் பாலிசை வண்ணமும்அடுத்த வண்ணமு மாவர்ஐ யாறரே.
சொற்பிரிப்பு
எடுத்த வாள் அரக்கன் திறல் வண்ணமும்,இடர்கள் போல் பெரிது ஆகிய வண்ணமும்,கடுத்த கைந் நரம்பால் இசை வண்ணமும்,அடுத்த வண்ணமும் ஆவர் ஐயாறரே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.