1
முந்தி மூவெயி லெய்த முதல்வனார்சிந்திப் பார்வினை தீர்த்திடுஞ் செல்வனார்அந்திக் கோன்றனக் கேயருள் செய்தவர்பந்திச் செஞ்சடைப் பாசூ ரடிகளே.
சொற்பிரிப்பு
முந்தி மூ எயில் எய்த முதல்வனார்,சிந்திப்பார் வினை தீர்த்திடும் செல்வனார்,அந்திக் கோன் தனக்கே அருள் செய்தவர்-பந்திச் செஞ்சடைப் பாசூர் அடிகளே.
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.