திருமுறை 5 · 5.023 · 10

திருநின்றியூர்

அருளியவர்
திருநாவுக்கரசர்
பண்
திருக்குறுந்தொகை
தலம்
நின்றியூர்
நாடு
சோழநாடு காவிரி வடகரை

1

கொடுங்கண் வெண்டலை கொண்டு குறைவிலைப்படுங்க ணொன்றில ராய்ப்பலி தேர்ந்துண்பர்நெடுங்கண் மங்கைய ராட்டயர் நின்றியூர்க்கடுங்கைக் கூற்றுதைத் திட்ட கருத்தரே.
சொற்பிரிப்பு
கொடுங்கண் வெண்தலை கொண்டு, குறைவிலைப்படும் கண் ஒன்று இலராய்ப் பலி தேர்ந்து உண்பர்-நெடுங்கண் மங்கையர் ஆட்டு அயர் நின்றியூர்க்கடுங்கைக் கூற்று உதைத்திட்ட கருத்தரே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

2

வீதி வேல்நெடுங் கண்ணியர் வெள்வளைநீதி யேகொளப் பாலது நின்றியூர்வேத மோதி விளங்குவெண் தோட்டராய்க்காதில் வெண்குழை வைத்தவெங் கள்வரே.
சொற்பிரிப்பு
வீதி வேல் நெடுங்கண்ணியர் வெள்வளைநீதியே கொளப்பாலது? நின்றியூர்வேதம் ஓதி, விளங்கு வெண் தோட்டராய்க்,காதில் வெண்குழை வைத்த எம் கள்வரே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

3

புற்றி னார்அர வம்புலித் தோல்மிசைச்சுற்றி னார்சுண்ணப் போர்வைகொண் டார்சுடர்நெற்றிக் கண்ணுடை யாரமர் நின்றியூர்பற்றி னாரைப்பற் றாவினை பாவமே.
சொற்பிரிப்பு
புற்றின் ஆர் அரவம் புலித்தோல் மிசைச்சுற்றினார்; சுண்ணப் போர்வை கொண்டார்; சுடர்நெற்றிக் கண் உடையார்; அமர் நின்றியூர்பற்றினாரைப் பற்றா, வினை பாவமே
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

4

பறையின் ஓசையும் பாடலின் ஓசையும்மறையின் ஓசையும் மல்கி அயலெலாம்நிறையும் பூம்பொழில் சூழ்திரு நின்றியூர்உறையும் ஈசனை உள்குமென் உள்ளமே.
சொற்பிரிப்பு
பறையின் ஓசையும், பாடலின் ஓசையும்,மறையின் ஓசையும், மல்கி அயல் எலாம்நிறையும் பூம்பொழில் சூழ் திரு நின்றியூர்உறையும் ஈசனை உள்கும், என் உள்ளமே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

5

சுனையுள் நீலஞ் சுளியும் நெடுங்கணாள்இனைய னென்றென்று மேசுவ தென்கொலோநினையுந் தண்வயல் சூழ்திரு நின்றியூர்ப்பனையின் ஈருரி போர்த்த பரமரே.
சொற்பிரிப்பு
சுனையுள் நீலம் சுளியும் நெடுங்கணாள்,இனையன் என்று என்றும் ஏசுவது என்கொலோ?-நினையும் தண்வயல் சூழ் திரு நின்றியூர்ப்பனையின் ஈர் உரி போர்த்த பரமரே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

6

உரைப்பக் கேண்மின்நும் உச்சியு ளான்றனைநிரைப்பொன் மாமதில் சூழ்திரு நின்றியூர்உரைப்பொற் கற்றைய ராரிவ ரோவெனிற்திரைத்துப் பாடித் திரிதருஞ் செல்வரே.
சொற்பிரிப்பு
உரைப்பக் கேண்மின், நும் உச்சி உளான் தனை!நிரைப்பொன் மாமதில் சூழ் திரு நின்றியூர்உரைப் பொன் கற்றையர் ஆர் இவரோ? எனில்,திரைத்துப் பாடித் திரிதரும் செல்வரே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

7

கன்றி யூர்முகில் போலுங் கருங்களிறின்றி ஏறல னாலிது வென்கொலோநின்றி யூர்பதி யாக நிலாயவன்வென்றி யேறுடை எங்கள் விகிர்தனே.
சொற்பிரிப்பு
கன்றி ஊர் முகில் போலும் கருங்களிறுஇன்றி ஏறலனால்; இது என்கொலோ?-நின்றியூர் பதியாக நிலாயவன்,வென்றி ஏறுடை எங்கள் விகிர்தனே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

8

நிலையி லாவெள்ளை மாலையன் நீண்டதோர்கொலைவி லாலெயில் எய்த கொடியவன்நிலையி னார்வயல் சூழ்திரு நின்றியூர்உரையி னாற்றொழு வார்வினை ஓயுமே.
சொற்பிரிப்பு
நிலை இலா வெள்ளை மாலையன், நீண்டது ஓர்கொலை விலால் எயில் எய்த கொடியவன்,நிலையின் ஆர் வயல் சூழ் திரு நின்றியூர்உரையி னால் தொழுவார் வினை ஓயுமே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

9

அஞ்சி யாகிலும் அன்புபட் டாகிலும்நெஞ்சம் வாழி நினைநின்றி யூரைநீஇஞ்சி மாமதில் எய்திமை யோர்தொழக்குஞ்சி வான்பிறை சூடிய கூத்தனே.
சொற்பிரிப்பு
அஞ்சி ஆகிலும் அன்புபட்டு ஆகிலும்நெஞ்சம்! வாழி! நினை, நின்றியூரை நீ!-இஞ்சி மாமதில் எய்து இமையோர் தொழக்குஞ்சி வான்பிறை சூடிய கூத்தனே
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

10

எளிய னாமொழி யாஇலங் கைக்கிறைகளியி னாற்கயி லாய மெடுத்தவன்நெளிய வூன்ற வலானமர் நின்றியூர்அளியி னாற்றொழு வார்வினை யல்குமே.
சொற்பிரிப்பு
எளியனா மொழியா இலங்கைக்கு இறை,களியினால் கயிலாயம் எடுத்தவன்,நெளிய ஊன்ற வலான் அமர் நின்றியூர்அளியினால் தொழுவார் வினை அல்குமே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.