1
பூவ ணத்தவன் புண்ணியன் நண்ணியங்காவ ணத்துடை யானடி யார்களைத்தீவ ணத்திரு நீறுமெய் பூசியோர்கோவ ணத்துடை யான்குட மூக்கிலே.
சொற்பிரிப்பு
பூவணத்தவன்; புண்ணியன்; நண்ணி அங்குஆவணத்து உடையான், அடியார்களைத்;-தீவணத் திரு நீறு மெய் பூசி, ஓர்கோவணத்து உடையான், குட மூக்கிலே.
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.