திருமுறை 5 · 5.021 · 10

திருவின்னம்பர்

அருளியவர்
திருநாவுக்கரசர்
பண்
திருக்குறுந்தொகை
தலம்
இன்னம்பர்
நாடு
சோழநாடு காவிரி வடகரை

1

என்னி லாரும் எனக்கினி யாரில்லைஎன்னி லும்மினி யானொரு வன்னுளன்என்னு ளேஉயிர்ப் பாய்ப்புறம் போந்துபுக்கென்னு ளேநிற்கும் இன்னம்பர் ஈசனே.
சொற்பிரிப்பு
என்னில் ஆரும் எனக்கு இனியார் இல்லை;என்னிலும் இனியான் ஒருவன் உளன்;என் உளே உயிர்ப்பு ஆய்ப் புறம் போந்து புக்குஎன் உளே நிற்கும், இன்னம்பர் ஈசனே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

2

மட்டுண் பார்கள் மடந்தையர் வாட்கணால்கட்டுண் பார்கள் கருதுவ தென்கொலோதட்டி முட்டித்தள் ளாடித் தழுக்குழிஎட்டு மூர்த்தியர் இன்னம்பர் ஈசனே.
சொற்பிரிப்பு
மட்டு உண்பார்கள், மடந்தையர் வாள்கணால்கட்டுண்பார்கள், கருதுவது என் கொலோ?தட்டி முட்டித் தள்ளாடித் தழுக்குழிஎட்டு மூர்த்தியர், இன்னம்பர் ஈசனே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

3

கனலுங் கண்ணியுந் தண்மதி யோடுடன்புனலுங் கொன்றையுஞ் சூடும் புரிசடைஅனலுஞ் சூலமும் மான்மறிக் கையினர்எனலும் என்மனத் தின்னம்பர் ஈசனே.
சொற்பிரிப்பு
கனலும் கண்ணியும், தண் மதியோடு, உடன்புனலும், கொன்றையும், சூடும் புரிசடை;அனலும், சூலமும், மான் மறிக்கையினர்எனலும், என் மனத்து, இன்னம்பர் ஈசனே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

4

மழைக்கண் மாமயி லாலும் மகிழ்ச்சியான்அழைக்குந் தன்னடி யார்கள்தம் அன்பினைக்குழைக்குந் தன்னைக் குறிக்கொள வேண்டியேஇழைக்கு மென்மனத் தின்னம்பர் ஈசனே.
சொற்பிரிப்பு
மழைக்கண் மாமயில் ஆலும் மகிழ்ச்சியான்அழைக்கும், தன் அடியார்கள் தம் அன்பினைக்;குழைக்கும் தன்னைக் குறிக்கொள வேண்டியேஇழைக்கும், என் மனத்து இன்னம்பர் ஈசனே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

5

தென்ன வனென்னை யாளுஞ் சிவனவன்மன்ன வன்மதி யம்மறை யோதியான்முன்ன மன்னவன் சேரலன் பூழியான்இன்னம் இன்புற்ற இன்னம்பர் ஈசனே.
சொற்பிரிப்பு
தென்னவன்; எனை ஆளும் சிவன் அவன்;மன்னவன்; மதி அம்மறை ஓதியான்;முன்னம் அன்னவன் சேர்வன, பூழியான்,இன்னம் இன்புற்ற இன்னம்பர் ஈசனே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

6

விளக்கும் வேறு படப்பிறர் உள்ளத்தில்அளக்குந் தன்னடி யார்மனத் தன்பினைக்குளக்கும் என்னைக் குறிக்கொள வேண்டியேஇளக்கும் என்மனத் தின்னம்பர் ஈசனே.
சொற்பிரிப்பு
விளக்கும், வேறுபடப் பிறர் உள்ளத்தில்;அளக்கும், தன் அடியார் மனத்து அன்பினைக்;குளக்கும் என்னைக் குறிக்கொள வேண்டியேஇளக்கும், என் மனத்து இன்னம்பர் ஈசனே
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

7

சடைக்க ணாள்புன லாள்அனல் கையதோர்கடைக்க ணால்மங்கை நோக்கிம வான்மகள்படைக்க ணாற்பரு கப்படு வான்நமக்கிடைக்க ணாய்நின்ற இன்னம்பர் ஈசனே.
சொற்பிரிப்பு
சடைக்கணாள், புனலாள்; அனல் கையது; ஓர்கடைக்கணால் மங்கை நோக்க, இமவான் மகள்படைக்கணால் பருகப்படுவான் நமக்குஇடைக்கண் ஆய் நின்ற இன்னம்பர் ஈசனே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

8

தொழுது தூமலர் தூவித் துதித்துநின்றழுது காமுற் றரற்றுகின் றாரையும்பொழுது போக்கிப் புறக்கணிப் பாரையும்எழுதுங் கீழ்க்கணக் கின்னம்பர் ஈசனே.
சொற்பிரிப்பு
தொழுது தூமலர் தூவித் துதித்து நின்றுஅழுது காமுற்று அரற்றுகின்றாரையும்,பொழுது போக்கிப் புறக்கணிப்பாரையும்,எழுதும், கீழ்க்கணக்கு இன்னம்பர் ஈசனே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

9

விரியுந் தண்ணிள வேனிலில் வெண்பிறைபுரியுங் காமனை வேவப் புருவமுந்திரியும் எல்லையில் மும்மதில் தீயெழுந்தெரிய நோக்கிய இன்னம்பர் ஈசனே.
சொற்பிரிப்பு
விரியும் தண் இள வேனிலில் வெண்பிறைபுரியும் காமனை வேவப், புருவமும்திரியும் எல்லையில் மும்மதில் தீ எழுந்துஎரிய, நோக்கிய இன்னம்பர் ஈசனே!
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

10

சனியும் வெள்ளியுந் திங்களும் ஞாயிறும்முனிவ னாய்முடி பத்துடை யான்றனைக்கனிய வூன்றிய காரண மென்கொலோஇனிய னாய்நின்ற இன்னம்பர் ஈசனே.
சொற்பிரிப்பு
சனியும் வெள்ளியும் திங்களும் ஞாயிறும்முனிவனாய் முடி பத்து உடையான் தனைக்கனிய ஊன்றிய காரணம் என் கொலோ,இனியனாய் நின்ற இன்னம்பர் ஈசனே?
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.