திருமுறை 5 · 5.020 · 10

திருக்கடம்பூர்க்கரக்கோயில்

அருளியவர்
திருநாவுக்கரசர்
பண்
திருக்குறுந்தொகை
தலம்
கடம்பூர்
நாடு
சோழநாடு காவிரி வடகரை

1

ஒருவ ராயிரு மூவரு மாயவன்குருவ தாய குழகன் உறைவிடம்பருவ ரால்குதி கொள்ளும் பழனஞ்சூழ்கருவ தாங்கடம் பூர்க்கரக் கோயிலே.
சொற்பிரிப்பு
ஒருவராய் இரு மூவரும் ஆயவன்,குரு அது ஆய குழகன், உறைவிடம்-பரு வரால் குதி கொள்ளும் பழனம் சூழ்கரு அது ஆம் கடம்பூர்க் கரக்கோயிலே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

2

வன்னி மத்தம் வளரிளந் திங்களோர்கன்னி யாளைக் கதிர்முடி வைத்தவன்பொன்னின் மல்கு புணர்முலை யாளொடும்மன்னி னான்கடம் பூர்க்கரக் கோயிலே.
சொற்பிரிப்பு
வன்னி, மத்தம், வளர்இளந் திங்கள், ஓர்கன்னியாளைக், கதிர் முடி வைத்தவன்;பொன்னின் மல்கு புணர் முலையாளொடும்மன்னினான்; கடம்பூர்க் கரக்கோயிலே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

3

இல்லக் கோலமும் இந்த இளமையும்அல்லற் கோலம் அறுத்துய வல்லிரேஒல்லைச் சென்றடை யுங்கடம் பூர்நகர்ச்செல்வக் கோயில் திருக்கரக் கோயிலே.
சொற்பிரிப்பு
இல்லக் கோலமும், இந்த இளமையும்,அல்லல் கோலம், அறுத்து உய வல்லிரே!ஒல்லைச் சென்று அடையும், கடம்பூர் நகர்ச்செல்வக் கோயில் திருக் கரக்கோயிலே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

4

வேறு சிந்தை யிலாதவர் தீவினைகூறு செய்த குழகன் உறைவிடம்ஏறு செல்வத் திமையவர் தாந்தொழும்ஆறு சேர்கடம் பூர்க்கரக் கோயிலே.
சொற்பிரிப்பு
வேறு சிந்தை இலாதவர் தீவினைகூறு செய்த குழகன் உறைவிடம்-ஏறு செல்வத்து இமையவர் தாம் தொழும்ஆறு சேர் கடம்பூர்க் கரக்கோயிலே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

5

திங்கள் தங்கிய செஞ்சடை மேலுமோர்மங்கை தங்கும் மணாளன் இருப்பிடம்பொங்கு சேர்மணற் புன்னையும் ஞாழலுந்தெங்கு சேர்கடம் பூர்க்கரக் கோயிலே.
சொற்பிரிப்பு
திங்கள் தங்கிய செஞ்சடை மேலும் ஓர்மங்கை தங்கும் மணாளன் இருப்பிடம்-பொங்கு சேர் மணல் புன்னையும், ஞாழலும்,தெங்கு, சேர் கடம்பூர்க் கரக்கோயிலே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

6

மல்லை ஞாலத்து வாழும் உயிர்க்கெலாம்எல்லை யான பிரானார் இருப்பிடங்கொல்லை முல்லை கொழுந்தகை மல்லிகைநல்ல சேர்கடம் பூர்க்கரக் கோயிலே.
சொற்பிரிப்பு
மல்லை ஞாலத்து வாழும் உயிர்க்கு எலாம்எல்லை ஆன பிரானார் இருப்பிடம்-கொல்லை முல்லை, கொழுந்தகை மல்லிகை,நல்ல சேர் கடம்பூர்க் கரக்கோயிலே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

7

தளரும் வாளர வத்தொடு தண்மதிவளரும் பொற்சடை யாற்கிட மாவதுகிளரும் பேரொலி கின்னரம் பாட்டறாக்களரி யார்கடம் பூர்க்கரக் கோயிலே.
சொற்பிரிப்பு
தளரும் வாள் அரவத்தொடு தண்மதிவளரும் பொன் சடையார்க்கு இடம் ஆவது-கிளரும் பேர் ஒலி கின்னரம் பாட்டு அறாக்களரி ஆர் கடம்பூர்க் கரக்கோயிலே
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

8

உற்றா ராயுற வாகி உயிர்க்கெலாம்பெற்றா ராய பிரானார் உறைவிடம்முற்றார் மும்மதி லெய்த முதல்வனார்கற்றார் சேர்கடம் பூர்க்கரக் கோயிலே.
சொற்பிரிப்பு
உற்றாராய் உறவு ஆகி உயிர்க்கு எலாம்பெற்றார் ஆய பிரானார் உறைவிடம்முற்றார் மும்மதில் எய்த முதல்வனார்,கற்றார் சேர், கடம்பூர்க் கரக்கோயிலே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

9

வெள்ளை நீறணி மேனிய வர்க்கெலாம்உள்ள மாய பிரானார் உறைவிடம்பிள்ளை வெண்பிறை சூடிய சென்னியான்கள்வன் சேர்கடம் பூர்க்கரக் கோயிலே.
சொற்பிரிப்பு
வெள்ளை நீறு அணி மேனியவர்க்கு எலாம்உள்ளம் ஆய பிரானார் உறைவிடம்-பிள்ளை வெண்பிறை சூடிய சென்னியான்,கள்வன், சேர் கடம்பூர்க் கரக்கோயிலே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

10

பரப்பு நீரிலங் கைக்கிறை வன்னவன்உரத்தி னாலடுக் கல்லெடுக் கல்லுறஇரக்க மின்றி இறைவிர லாற்றலைஅரக்கி னான்கடம் பூர்க்கரக் கோயிலே.
சொற்பிரிப்பு
பரப்பு நீர் இலங்கைக்கு இறைவன் அவன்உரத்தினால் அடுக்கல் எடுக்கல் உற,இரக்கம் இன்றி இறை விரலால் தலைஅரக்கினான் கடம்பூர்க் கரக்கோயிலே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.