திருமுறை 5 · 5.019 · 11

திருக்கடம்பூர்

அருளியவர்
திருநாவுக்கரசர்
பண்
திருக்குறுந்தொகை
தலம்
கடம்பூர்
நாடு
சோழநாடு காவிரி வடகரை

1

தளருங் கோளர வத்தொடு தண்மதிவளருங் கோல வளர்சடை யார்க்கிடங்கிளரும் பேரிசைக் கின்னரம் பாட்டறாக்களருங் கார்க்கடம் பூர்க்கரக் கோயிலே.
சொற்பிரிப்பு
தளரும் கோள் அரவத்தொடு தண்மதிவளரும் கோல வளர்சடையார்க்கு இடம்கிளரும் பேர் இசைக் கின்னரம் பாட்டு அறாக்களரும் கார்க் கடம்பூர்க் கரக்கோயிலே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

2

வெலவ லான்புலன் ஐந்தொடு வேதமுஞ்சொலவ லான்சுழ லுந்தடு மாற்றமும்அலவ லான்மனை யார்ந்தமென் றோளியைக்கலவ லான்கடம் பூர்க்கரக் கோயிலே.
சொற்பிரிப்பு
வெலவலான், புலன் ஐந்தொடு; வேதமும்சொல வலான்; சுழலும் தடுமாற்றமும்அலவலான்; மனை ஆர்ந்த மென்தோளியைக்கலவலான்; கடம்பூர்க் கரக்கோயிலே
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

3

பொய்தொ ழாது புலியுரி யோன்பணிசெய்தெ ழாவெழு வார்பணி செய்தெழாவைதெ ழாதெழு வாரவர் எள்கநீர்கைதொ ழாவெழு மின்கரக் கோயிலே.
சொற்பிரிப்பு
பொய் தொழாது, புலிஉரியோன் பணிசெய்துஎழா எழுவார் பணி செய்துஎழாவைதுஎழாது எழுவார் அவர் எள்க, நீர்கைதொழாஎழுமின் ,கரக்கோயிலே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

4

துண்ணெ னாமனத் தால்தொழு நெஞ்சமேபண்ணி னான்முனம் பாடல துசெய்தேஎண்ணி லாரெயில் மூன்றும் எரித்தமுக்கண்ணி னான்கடம் பூர்க்கரக் கோயிலே.
சொற்பிரிப்பு
துண்ணெனா,மனத்தால் தொழு, நெஞ்சமே!பண்ணினால் முனம் பாடல் அது செய்தே;எண் இலார் எயில் மூன்றும் எரித்த முக்-கண்ணினான் கடம்பூர்க் கரக்கோயிலே
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

5

சுனையுள் நீல மலரன கண்டத்தன்புனையும் பொன்னிறக் கொன்றை புரிசடைக்கனையும் பைங்கழ லான்கரக் கோயிலைநினையும் உள்ளத் தவர்வினை நீங்குமே.
சொற்பிரிப்பு
சுனையுள் நீல மலர் அன கண்டத்தன்,புனையும் பொன் நிறக் கொன்றை புரிசடைக்கனையும் பைங்கழலான், கரக்கோயிலைநினையும் உள்ளத்தவர் வினை நீங்குமே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

6

குணங்கள் சொல்லியுங் குற்றங்கள் பேசியும்வணங்கி வாழ்த்துவர் அன்புடை யாரெலாம்வணங்கி வான்மலர் கொண்டடி வைகலுங்கணங்கள் போற்றிசைக் குங்கரக் கோயிலே.
சொற்பிரிப்பு
குணங்கள் சொல்லியும் குற்றங்கள் பேசியும்வணங்கி வாழ்த்துவர், அன்புடையார் எலாம்வணங்கி வான்மலர் கொண்டு அடி வைகலும்கணங்கள் போற்று இசைக்கும் கரக்கோயிலே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

7

பண்ணி னார்மறை பல்பல பூசனைமண்ணி னார்செய்வ தன்றியும் வைகலும்விண்ணி னார்கள் வியக்கப் படுவனகண்ணி னார்கடம் பூர்க்கரக் கோயிலே.
சொற்பிரிப்பு
பண்ணின் ஆர் மறை பல்பல பூசனைமண்ணினார் செய்வது அன்றியும், வைகலும்விண்ணினார்கள் வியக்கப்படும் அவன்கண்ணின் ஆர் கடம்பூர்க் கரக்கோயிலே
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

8

அங்கை ஆரழ லேந்திநின் றாடலன்மங்கை பாட மகிழ்ந்துடன் வார்சடைக்கங்கை யானுறை யுங்கரக் கோயிலைத்தங்கை யாற்றொழு வார்வினை சாயுமே.
சொற்பிரிப்பு
அங்கை ஆர் அழல் ஏந்தி நின்று ஆடலன்மங்கை பாட மகிழ்ந்துடன் வார்சடைக்கங்கையான் உறையும் கரக்கோயிலைத்தம் கையால் தொழுவார் வினை சாயுமே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

9

நங்க டம்பனைப் பெற்றவள் பங்கினன்தென்க டம்பைத் திருக்கரக் கோயிலான்தன்க டன்னடி யேனையுந் தாங்குதல்என்க டன்பணி செய்து கிடப்பதே.
சொற்பிரிப்பு
நம் கடம்பனைப் பெற்றவள் பங்கினன்,தென் கடம்பைத் திருக் கரக்கோயிலான்-தன் கடன் அடியேனையும் தாங்குதல்;என் கடன் பணி செய்து கிடப்பதே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

10

பணங்கொள் பாற்கடல் பாம்பணை யானொடும்மணங்க மழ்மலர்த் தாமரை யானவன்பிணங்கும் பேரழல் எம்பெரு மாற்கிடங்கணங்கள் போற்றிசைக் குங்கரக் கோயிலே.
சொற்பிரிப்பு
பணங்கொள் பாற்கடல் பாம்பு அணையானொடும்,மணம் கமழ் மலர்த் தாமரையான் அவன்,பிணங்கும் பேர் அழல் எம்பெருமாற்கு இடம்-கணங்கள் போற்று இசைக்கும் கரக்கோயிலே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

11

வரைக்கண் நாலஞ்சு தோளுடை யான்றலைஅரைக்க வூன்றி அருள்செய்த ஈசனார்திரைக்குந் தண்புனல் சூழ்கரக் கோயிலைஉரைக்கும் உள்ளத் தவர்வினை ஓயுமே.
சொற்பிரிப்பு
வரைக்கண் நால்-அஞ்சு தோள் உடையான் தலைஅரைக்க ஊன்றி அருள் செய்த ஈசனார்,திரைக்கும் தண்புனல் சூழ், கரக்கோயிலைஉரைக்கும் உள்ளத்தவர் வினை ஓயுமே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.