திருமுறை 5 · 5.017 · 11

திருவெண்ணி

அருளியவர்
திருநாவுக்கரசர்
பண்
திருக்குறுந்தொகை
தலம்
வெண்ணியூர்
நாடு
சோழநாடு காவிரித் தென்கரை

1

முத்தி னைப்பவ ளத்தை முளைத்தவெந்தொத்தி னைச்சுட ரைச்சுடர் போலொளிப்பித்த னைக் கொலும் நஞ்சினை வானவர்நித்த னைநெரு நற்கண்ட வெண்ணியே.
சொற்பிரிப்பு
முத்தினைப், பவளத்தை, முளைத்த எம்தொத்தினைச்,சுடரைச், சுடர் போல் ஒளிப்பித்தனைக்,கொலும் நஞ்சினை, வானவர்நித்தனை, நெருநல் கண்ட வெண்ணியே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

2

வெண்ணித் தொன்னகர் மேயவெண் டிங்களார்கண்ணித் தொத்த சடையர் கபாலியார்எண்ணித் தம்மை நினைந்திருந் தேனுக்குஅண்ணித் திட்டமு தூறுமென் நாவுக்கே.
சொற்பிரிப்பு
வெண்ணித் தொல் நகர் மேய வெண் திங்கள் ஆர்கண்ணித் தொத்த சடையர்; கபாலியார்;எண்ணித் தம்மை நினைந்து இருந்தேனுக்குஅண்ணித்திட்டு அமுது ஊறும், என் நாவுக்கே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

3

காற்றி னைக்கன லைக்கதிர் மாமணிநீற்றி னைநினைப் பார்வினை நீக்கிடுங்கூற்றி னையுதைத் திட்ட குணமுடைவீற்றி னைநெரு நற்கண்ட வெண்ணியே.
சொற்பிரிப்பு
காற்றினைக்; கனலைக்; கதிர் மாமணிநீற்றினை; நினைப்பார் வினை நீக்கிடும்,கூற்றினை உதைத்திட்ட குணம் உடை,வீற்றினை; நெருநல் கண்ட வெண்ணியே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

4

நல்ல னைத்திகழ் நான்மறை யோதியைச்சொல்ல னைச்சுட ரைச்சுடர் போலொளிர்கல்ல னைக்கடி மாமதில் மூன்றெய்தவில்ல னைநெரு நற்கண்ட வெண்ணியே.
சொற்பிரிப்பு
நல்லனைத், திகழ் நால்மறை ஓதியைச்,சொல்லனைச், சுடரைச், சுடர் போல் ஒளிர்கல்லனைக், கடி மாமதில் மூன்று எய்தவில்லனை, நெருநல் கண்ட வெண்ணியே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

5

சுடரைப் போலொளிர் சுண்ணவெண் ணீற்றனைஅடருஞ் சென்னியில் வைத்த அமுதினைப்படருஞ் செஞ்சடைப் பான்மதி சூடியைஇடரை நீக்கியை யான்கண்ட வெண்ணியே.
சொற்பிரிப்பு
சுடரைப் போல் ஒளிர் சுண்ண வெண் நீற்றனை,அடரும் சென்னியில் வைத்த அமுதினைப்,படரும் செஞ்சடைப் பால்மதி சூடியை,இடரை நீக்கியை, யான் கண்ட வெண்ணியே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

6

பூத நாதனைப் பூம்புக லூரனைத்தாதெ னத்தவ ழும்மதி சூடியைநாத னைநல்ல நான்மறை யோதியைவேத னைநெரு நற்கண்ட வெண்ணியே.
சொற்பிரிப்பு
பூத நாதனைப், பூம்புகலூரனைத்,தாது எனத் தவழும் மதி சூடியை,நாதனை, நல்ல நால்மறை ஓதியை,வேதனை, நெருநல் கண்ட வெண்ணியே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

7

ஒருத்தி யையொரு பாகத் தடக்கியும்பொருத்தி யபுனி தன்புரி புன்சடைக்கருத்த னைக்கறைக் கண்டனைக் கண்ணுதல்நிருத்த னைநெரு நற்கண்ட வெண்ணியே.
சொற்பிரிப்பு
ஒருத்தியை ஒரு பாகத்து அடக்கியும்பொருத்திய புனிதன், புரி புன்சடைக்கருத்தனைக், கறைக் கண்டனைக், கண்நுதல்நிருத்தனை, நெருநல் கண்ட வெண்ணியே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

8

சடைய னைச்சரி கோவண ஆடைகொண்டுடைய னையுணர் வார்வினை தீர்த்திடும்படைய னைமழு வாளொடு பாய்தரும்விடைய னைநெரு நற்கண்ட வெண்ணியே.
சொற்பிரிப்பு
சடையனைச்; சரி கோவண ஆடைகொண்டுஉடையனை; உணர்வார் வினை தீர்த்திடும்படையனை, மழுவாளொடு; பாய்தரும்விடையனை; நெருநல் கண்ட வெண்ணியே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

9

பொருப்ப னைப்புன லாளொடு புன்சடைஅருப்ப னையிளந் திங்களங் கண்ணியான்பருப்ப தம்பர வித்தொழுந் தொண்டர்கள்விருப்ப னைநெரு நற்கண்ட வெண்ணியே.
சொற்பிரிப்பு
பொருப்பனைப், புனலாளொடு புன்சடைஅருப்பனை, இளந் திங்கள் அம் கண்ணியான்பருப்பதம் பரவித் தொழும் தொண்டர்கள்விருப்பனை, நெருநல் கண்ட வெண்ணியே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

10

சூல வஞ்சனை வல்லவெஞ் சுந்தரன்கோல மாவருள் செய்ததோர் கொள்கையான்காலன் அஞ்ச வுதைத்திருள் கண்டமாம்வேலை நஞ்சனைக் கண்டது வெண்ணியே.
சொற்பிரிப்பு
சூல, வஞ்சனை, வல்ல எம் சுந்தரன்;கோலமா அருள் செய்தது ஓர் கொள்கையான்;காலன் அஞ்ச உ தைத்து, இருள் கண்டமாம்வேலை நஞ்சனைக்; கண்டது வெண்ணியே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

11

இலையி னார்கொன்றை சூடிய ஈசனார்மலையி னாலரக் கன்றிறல் வாட்டினார்சிலையி னான்மதி லெய்தவன் வெண்ணியைத்தலையி னாற்றொழு வார்வினை தாவுமே.
சொற்பிரிப்பு
இலையின் ஆர் கொன்றை சூடிய ஈசனார்,மலையினால் அரக்கன் திறல் வாட்டினார்,சிலையினால் மதில் எய்தவன், வெண்ணியைத்தலையினால் தொழுவார் வினை தாவுமே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.