திருமுறை 5 · 5.015 · 11

திருவிடைமருதூர்

அருளியவர்
திருநாவுக்கரசர்
பண்
திருக்குறுந்தொகை
தலம்
இடைமருதூர்
நாடு
சோழநாடு காவிரித் தென்கரை

1

பறையின் ஓசையும் பாடலின் ஓசையும்மறையின் ஓசையும் வைகும் அயலெலாம்இறைவன் எங்கள் பிரானிடை மருதினில்உறையும் ஈசனை உள்குமென் உள்ளமே.
சொற்பிரிப்பு
பறையின் ஓசையும் பாடலின் ஓசையும்மறையின் ஓசையும் வைகும், அயல் எலாம்,-இறைவன், எங்கள் பிரான் இடை மருதினில்உறையும் ஈசனை உள்கும், என் உள்ளமே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

2

மனத்துள் மாயனை மாசறு சோதியைப்புனிற்றுப் பிள்ளைவெள் ளைம்மதி சூடியைஎனக்குத் தாயையெம் மானிடை மருதனைநினைத்திட் டூறி நிறைந்ததென் னுள்ளமே.
சொற்பிரிப்பு
மனத்துள் மாயனை, மாசு அறு சோதியைப்,புனிற்றுப் பிள்ளை வெள்ளை மதி சூடியை,எனக்குத் தாயை, எம்மான் இடை மருதனை,நினைத்திட்டு ஊறி நிறைந்தது என் உள்ளமே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

3

வண்ட ணைந்தன வன்னியும் மத்தமுங்கொண்ட ணிந்த சடைமுடிக் கூத்தனைஎண்டி சைக்கும் இடைமரு தாவெனவிண்டு போயறும் மேலை வினைகளே.
சொற்பிரிப்பு
வண்டு அணைந்தன வன்னியும் மத்தமும்கொண்டு அணிந்த சடைமுடிக் கூத்தனைஎண் திசைக்கும் இடைமருதா! என,விண்டு போய் அறும், மேலை வினைகளே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

4

துணையி லாமையிற் றூங்கிருட் பேய்களோடணைய லாவதெ மக்கரி தேயெனாஇணையி லாஇடை மாமரு தில்லெழுபணையி லாகமஞ் சொல்லுந்தன் பாங்கிக்கே.
சொற்பிரிப்பு
துணை இலாமையில் தூங்கு இருள் பேய்களோடுஅணையல் ஆவது எமக்கு அரிதே! எனாஇணை இலா இடை மாமருதில் எழுபணையில் ஆகமம் சொல்லும், தன் பாங்கிக்கே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

5

மண்ணை யுண்டமால் காணான் மலரடிவிண்ணை விண்டயன் காணான் வியன்முடிமொண்ணை மாமரு தாவென்றென் மொய்குழல்பண்ணை யாயமுந் தானும் பயிலுமே.
சொற்பிரிப்பு
மண்ணை உண்ட மால் காணான், மலர் அடி;விண்ணை விண்டு அயன் காணான், வியன்முடிமொண்ணை மாமருதா! என்று என் மொய்குழல்பண்ணை ஆயமும் தானும் பயிலுமே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

6

மங்கை காணக் கொடார்மண மாலையைக்கங்கை காணக் கொடார்முடிக் கண்ணியைநங்கை மீர்இடை மருதரிந் நங்கைக்கேஎங்கு வாங்கிக் கொடுத்தார் இதழியே.
சொற்பிரிப்பு
மங்கை காணக் கொடார், மணமாலையைக்;கங்கை காணக் கொடார், முடிக்கண்ணியை;நங்கைமீர்! இடை மருதர் இந்நங்கைக்கேஎங்கு வாங்கிக் கொடுத்தார், இதழியே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

7 Unavailable

இந்தப் பாடல் மூலத்தில் கிடைக்கப்பெறவில்லை. பாடல் வரிகள் இங்கே சேர்க்கப்படவில்லை.

இப்பதிகத்தில் 7-ம் பாடல் கிடைக்கப்பெறவில்லை.
சொற்பிரிப்பு
பாடல் கிடைக்கப்பெறவில்லை
உரை

பாடல் கிடைக்கப்பெறவில்லை

8 Unavailable

இந்தப் பாடல் மூலத்தில் கிடைக்கப்பெறவில்லை. பாடல் வரிகள் இங்கே சேர்க்கப்படவில்லை.

இப்பதிகத்தில் 8-ம் பாடல் கிடைக்கப்பெறவில்லை.
சொற்பிரிப்பு
பாடல் கிடைக்கப்பெறவில்லை
உரை

பாடல் கிடைக்கப்பெறவில்லை

9 Unavailable

இந்தப் பாடல் மூலத்தில் கிடைக்கப்பெறவில்லை. பாடல் வரிகள் இங்கே சேர்க்கப்படவில்லை.

இப்பதிகத்தில் 9-ம் பாடல் கிடைக்கப்பெறவில்லை.
சொற்பிரிப்பு
பாடல் கிடைக்கப்பெறவில்லை
உரை

பாடல் கிடைக்கப்பெறவில்லை

10 Unavailable

இந்தப் பாடல் மூலத்தில் கிடைக்கப்பெறவில்லை. பாடல் வரிகள் இங்கே சேர்க்கப்படவில்லை.

இப்பதிகத்தில் 10-ம் பாடல் கிடைக்கப்பெறவில்லை.
சொற்பிரிப்பு
பாடல் கிடைக்கப்பெறவில்லை
உரை

பாடல் கிடைக்கப்பெறவில்லை

11 Unavailable

இந்தப் பாடல் மூலத்தில் கிடைக்கப்பெறவில்லை. பாடல் வரிகள் இங்கே சேர்க்கப்படவில்லை.

இப்பதிகத்தில் 11-ம் பாடல் கிடைக்கப்பெறவில்லை.
சொற்பிரிப்பு
பாடல் கிடைக்கப்பெறவில்லை
உரை

பாடல் கிடைக்கப்பெறவில்லை