திருமுறை 5 · 5.014 · 11

திருவிடைமருதூர்

அருளியவர்
திருநாவுக்கரசர்
பண்
திருக்குறுந்தொகை
தலம்
இடைமருதூர்
நாடு
சோழநாடு காவிரித் தென்கரை

1

பாச மொன்றில ராய்ப்பல பத்தர்கள்வாச நாண்மலர் கொண்டடி வைகலும்ஈச னெம்பெரு மான்இடை மருதினிற்பூச நாம்புகு தும்புன லாடவே.
சொற்பிரிப்பு
பாசம் ஒன்று இலராய்ப், பல பத்தர்கள்வாசம் நாள்மலர் கொண்டு அடி வைகலும்,ஈசன் எம்பெருமான் இடை மருதினில்பூசம், நாம் புகுதும், புனல் ஆடவே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

2

மறையின் நாண்மலர் கொண்டடி வானவர்முறையி னான்முனி கள்வழி பாடுசெய்இறைவன் எம்பெரு மான்இடை மருதினில்உறையும் ஈசனை உள்குமென் உள்ளமே.
சொற்பிரிப்பு
மறையின் நாள்மலர் கொண்டு அடி வானவர்-முறையினால் முனிகள் வழிபாடு செய்இறைவன், எம்பெருமான், இடை மருதினில்உறையும் ஈசனை, உள்கும், என் உள்ளமே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

3

கொன்றை மாலையுங் கூவிள மத்தமுஞ்சென்று சேரத் திகழ்சடை வைத்தவன்என்று மெந்தை பிரான்இடை மருதினைநன்று கைதொழு வார்வினை நாசமே.
சொற்பிரிப்பு
கொன்றை மாலையும் கூவிளம் மத்தமும்சென்று சேரத் திகழ் சடை வைத்தவன்,என்றும் எந்தை பிரான், இடை மருதினைநன்று கைதொழுவார் வினை நாசமே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

4

இம்மை வானவர் செல்வம் விளைத்திடும்அம்மை யேற்பிற வித்துயர் நீத்திடும்எம்மை யாளும் இடைமரு தன்கழல்செம்மை யேதொழு வார்வினை சிந்துமே.
சொற்பிரிப்பு
இம்மை வானவர் செல்வம் விளைத்திடும்,அம்மையேற் பிறவித் துயர் நீத்திடும்எம்மை ஆளும், இடைமருதன் கழல்செம்மையே தொழுவார் வினை சிந்துமே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

5

வண்ட ணைந்தன வன்னியுங் கொன்றையுங்கொண்ட ணிந்த சடைமுடிக் கூத்தனார்எண்டி சைக்கும் இடைமரு தாவெனவிண்டு போயறும் மேலை வினைகளே.
சொற்பிரிப்பு
வண்டு அணைந்தன வன்னியும் கொன்றையும்கொண்டு அணிந்த சடைமுடிக் கூத்தனார்,எண் திசைக்கும் இடைமருதா! என,விண்டு போய் அறும், மேலை வினைகளே
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

6

ஏற தேறும் இடைமரு தீசனார்கூறு வார்வினை தீர்க்குங் குழகனார்ஆறு செஞ்சடை வைத்த அழகனார்க்கூறி யூறி உருகுமென் உள்ளமே.
சொற்பிரிப்பு
ஏறு அது ஏறும் இடைமருது ஈசனார்,கூறுவார் வினை தீர்க்கும் குழகனார்,ஆறு செஞ்சடை வைத்த அழகனார்க்குஊறி ஊறி உருகும், என் உள்ளமே
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

7

விண்ணு ளாரும் விரும்பப் படுபவர்மண்ணு ளாரும் மதிக்கப் படுபவர்எண்ணி னார்பொழில் சூழிடை மருதினைநண்ணி னாரைநண் ணாவினை நாசமே.
சொற்பிரிப்பு
விண் உளாரும் விரும்பப் படுபவர்;மண் உளாரும் மதிக்கப் படுபவர்;எண்ணினார், பொழில் சூழ் இடை மருதினைநண்ணினாரை நண்ணா, வினை; நாசமே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

8

வெந்த வெண்பொடிப் பூசும் விகிர்தனார்கந்த மாலைகள் சூடுங் கருத்தனார்எந்தை யென்னிடை மருதினில் ஈசனைச்சிந்தை யால்நினை வார்வினை தேயுமே.
சொற்பிரிப்பு
வெந்த வெண்பொடிப் பூசும் விகிர்தனார்,கந்த மாலைகள் சூடும் கருத்தனார்,எந்தை,என் இடை மருதினில் ஈசனைச்சிந்தையால் நினைவார் வினை தேயுமே
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

9

வேத மோதும் விரிசடை அண்ணலார்பூதம் பாடநின் றாடும் புனிதனார்ஏதந் தீர்க்கும் இடைமரு தாவென்றுபாத மேத்தப் பறையுநம் பாவமே.
சொற்பிரிப்பு
வேதம் ஓதும் விரிசடை அண்ணலார்,பூதம் பாட நின்று ஆடும் புனிதனார்ஏதம் தீர்க்கும் இடைமருதா! என்றுபாதம் ஏத்தப் பறையும், நம் பாவமே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

10

கனியி னுங்கட்டி பட்ட கரும்பினும்பனிம லர்க்குழற் பாவைநல் லாரினுந்தனிமு டிகவித் தாளு மரசினும்இனியன் றன்னடைந் தார்க்கிடை மருதனே.
சொற்பிரிப்பு
கனியினும், கட்டி பட்ட கரும்பினும்,பனிமலர்க் குழல் பாவை நல்லாரினும்,தனிமுடி கவித்து ஆளும் அரசினும்,இனியன் தன் அடைந்தார்க்கு, இடை மருதனே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

11

முற்றி லாமதி சூடும் முதல்வனார்ஒற்றி னார்மலை யாலரக் கன்முடிஎற்றி னார்கொடி யாரிடை மருதினைப்பற்றி னாரைப்பற் றாவினை பாவமே.
சொற்பிரிப்பு
முற்றிலா மதி சூடும் முதல்வனார்;ஒற்றினார், மலையால் அரக்கன் முடி;எற்றின் ஆர் கொடியார்; இடை மருதினைப்பற்றினாரைப் பற்றா, வினை பாவமே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.