1
கரைந்து கைதொழு வாரையுங் காதலன்வரைந்து வைதெழு வாரையும் வாடலன்நிரந்த பாரிடத் தோடவர் நித்தலும்விரைந்து போவது வீழி மிழலைக்கே.
சொற்பிரிப்பு
கரைந்து கை தொழுவாரையும் காதலன்;வரைந்து வைது எழுவாரையும் வாடலன்;நிரந்த பாரிடத்தோடு அவர் நித்தலும்விரைந்து போவது, வீழி மிழலைக்கே.
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.