திருமுறை 5 · 5.011 · 10

திருமீயச்சூர் இளங்கோயில்

அருளியவர்
திருநாவுக்கரசர்
பண்
திருக்குறுந்தொகை
தலம்
மீயச்சூர் - இளங்கோயில்
நாடு
சோழநாடு காவிரித் தென்கரை

1

தோற்றுங் கோயிலுந் தோன்றிய கோயிலும்வேற்றுக் கோயில் பலவுள மீயச்சூர்க்கூற்றம் பாய்ந்த குளிர்புன் சடையாற்கேற்றங் கோயில்கண் டீரிளங் கோயிலே.
சொற்பிரிப்பு
தோற்றும் கோயிலும், தோன்றிய கோயிலும்,வேற்றுக் கோயில் பல உள; மீயச்சூர்க்,கூற்றம் பாய்ந்த குளிர் புன்சடை அரற்குஏற்றம் கோயில் கண்டீர், இளங்கோயிலே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

2

வந்த னையடைக் கும்மடித் தொண்டர்கள்பந்த னைசெய்து பாவிக்க நின்றவன்சிந்த னைதிருத் துந்திரு மீயச்சூர்எந்த மையுடை யாரிளங் கோயிலே.
சொற்பிரிப்பு
வந்தனை அடைக்கும் அடித் தொண்டர்கள்பந்தனை செய்து பாவிக்க நின்றவன்,சிந்தனை திருத்தும் திருமீயச்சூர்,எம் தமை உடையார், இளங்கோயிலே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

3

பஞ்ச மந்திர மோதும் பரமனார்அஞ்ச ஆனையுரித்தன லாடுவார்நெஞ்சம் வாழி நினைந்திரு மீயச்சூர்எந்த மையுடை யாரிளங் கோயிலே.
சொற்பிரிப்பு
பஞ்ச மந்திரம் ஓதும் பரமனார்,அஞ்ச ஆனை உரித்து அனல் ஆடுவார்,-நெஞ்சம்! வாழி நினைந்து இரு மீயச்சூர்,எந்தமை உடையார், இளங்கோயிலே!
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

4

நாறு மல்லிகை கூவிளஞ் செண்பகம்வேறு வேறு விரித்த சடையிடைஆறு கொண்டுகந் தான்றிரு மீயச்சூர்ஏறு கொண்டுகந் தாரிளங் கோயிலே.
சொற்பிரிப்பு
நாறு மல்லிகை கூவிளம் செண்பகம்வேறு வேறு விரித்த சடைஇடைஆறு கொண்டு உகந்தான், திரு மீயச்சூர்,ஏறு கொண்டு உகந்தார், இளங்கோயிலே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

5

வெவ்வ வண்ணத்து நாகம் வெருவவேகவ்வ வண்ணக் கனல்விரித் தாடுவர்செவ்வ வண்ணந் திகழ்திரு மீயச்சூர்எவ்வ வண்ணம் பிரானிளங் கோயிலே.
சொற்பிரிப்பு
வெவ்வ வண்ணத்து நாகம் வெருவவேகவ்வ வண்ணக் கனல் விரித்து ஆடுவர்,செவ்வ வண்ணம் திகழ் திருமீயச்சூர்,எவ்வ வண்ணம், பிரான் இளங்கோயிலே?
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

6

பொன்னங் கொன்றையும் பூவணி மாலையும்பின்னுஞ் செஞ்சடை மேற்பிறை சூடிற்றுமின்னு மேகலை யாளொடு மீயச்சூர்இன்ன நாள்அக லாரிளங் கோயிலே.
சொற்பிரிப்பு
பொன் அம் கொன்றையும், பூ அணி மாலையும்,பின்னும் செஞ்சடை மேல் பிறை சூடிற்று,மின்னும் மேகலையாளொடு, மீயச்சூர்,இன்ன நாள் அகலார், இளங்கோயிலே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

7

படைகொள் பூதத்தன் பைங்கொன்றைத் தாரினன்சடைகொள் வெள்ளத்தன் சாந்தவெண் ணீற்றினன்விடைகொ ளூர்தியி னான்றிரு மீயச்சூர்இடைகொண் டேத்தநின் றாரிளங் கோயிலே.
சொற்பிரிப்பு
படைகொள் பூதத்தன், பைங்கொன்றைத் தாரினன்,சடைகொள் வெள்ளத்தன், சாந்த வெண்நீற்றினன்,விடைகொள் ஊர்தியினான், திருமீயச்சூர்,இடைகொண்டு ஏத்த நின்றார், இளங்கோயிலே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

8

ஆறு கொண்ட சடையினர் தாமுமோர்வேறு கொண்டதொர் வேடத்த ராகிலுங்கூறு கொண்டுகந் தாளொடு மீயச்சூர்ஏறு கொண்டுகந் தாரிளங் கோயிலே.
சொற்பிரிப்பு
ஆறு கொண்ட சடையினர் தாமும் ஓர்வேறு கொண்டது ஓர் வேடத்தர் ஆகிலும்,கூறு கொண்டு உகந்தாளொடு, மீயச்சூர்,ஏறு கொண்டு உகந்தார், இளங்கோயிலே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

9

வேதத் தானென்பர் வேள்வியு ளானென்பர்பூதத் தானென்பர் புண்ணியன் றன்னையேகீதத் தான்கிள ருந்திரு மீயச்சூர்ஏதந் தீர்க்கநின் றாரிளங் கோயிலே.
சொற்பிரிப்பு
வேதத்தான் என்பர், வேள்வி உளான் என்பர்,பூதத்தான் என்பர், புண்ணியன் தன்னையே;கீதத்தான் கிளரும் திருமீயச்சூர்,ஏதம் தீர்க்க நின்றார், இளங்கோயிலே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

10

கடுக்கண் டன்கயி லாய மலைதனைஎடுக்க லுற்ற இராவணன் ஈடறவிடுக்க ணின்றி வெகுண்டவன் மீயச்சூர்இடுக்கண் தீர்க்கநின் றாரிளங் கோயிலே.
சொற்பிரிப்பு
கடுக்கண்டன் கயிலாய மலை தனைஎடுக்கல் உற்ற இராவணன் ஈடு அறவிடுக்கண் இன்றி வெகுண்டவன், மீயச்சூர்,இடுக்கண் தீர்க்க நின்றார், இளங்கோயிலே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.