திருமுறை 5 · 5.010 · 11

திருமறைக்காடு

அருளியவர்
திருநாவுக்கரசர்
பண்
திருக்குறுந்தொகை
தலம்
மறைக்காடு
நாடு
சோழநாடு காவிரித் தென்கரை

1

பண்ணி னேர்மொழி யாளுமை பங்கரோமண்ணி னார்வலஞ் செய்ம்மறைக் காடரோகண்ணி னாலுமைக் காணக் கதவினைத்திண்ண மாகத் திறந்தருள் செய்ம்மினே.
சொற்பிரிப்பு
பண்ணின் நேர் மொழியாள் உமை பங்கரோ!மண்ணினார் வலம் செய் மறைக்காடரோ!கண்ணினால் உமைக் காணக் கதவினைத்திண்ணம் ஆகத் திறந்து அருள் செய்ம்மினே!
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

2

ஈண்டு செஞ்சடை யாகத்துள் ஈசரோமூண்ட கார்முகி லின்முறிக் கண்டரோஆண்டு கொண்டநீ ரேயருள் செய்திடும்நீண்ட மாக்கத வின்வலி நீக்குமே.
சொற்பிரிப்பு
ஈண்டு செஞ்சடை ஆகத்துள் ஈசரோ!மூண்ட கார் முகிலின் முறிக் கண்டரோ!ஆண்டு கொண்ட நீரே அருள் செய்திடும்!நீண்ட மாக் கதவின் வலி நீக்குமே!
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

3

அட்ட மூர்த்திய தாகிய அப்பரோதுட்டர் வான்புரஞ் சுட்ட சுவண்டரோபட்டங் கட்டிய சென்னிப் பரமரோசட்ட விக்கத வந்திறப் பிம்மினே.
சொற்பிரிப்பு
அட்ட மூர்த்தி அது ஆகிய அப்பரோ!துட்டர் வான் புரம் சுட்ட சுவண்டரோ!பட்டம் கட்டிய சென்னிப் பரமரோ!சட்ட இக்கதவம் திறப்பிம்மினே!
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

4

அரிய நான்மறை யோதிய நாவரோபெரிய வான்புரஞ் சுட்ட சுவண்டரோவிரிகொள் கோவண ஆடை விருத்தரோபெரிய வான்கத வம்பிரி விக்கவே.
சொற்பிரிப்பு
அரிய நால்மறை ஓதிய நாவரோ!பெரிய வான்புரம் சுட்ட சுவண்டரோ!விரிகொள் கோவண ஆடை விருத்தரோ!பெரிய வான் கதவம் பிரிவிக்கவே!
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

5

மலையில் நீடிருக் கும்மறைக் காடரோகலைகள் வந்திறைஞ் சுங்கழ லேத்தரோவிலையில் மாமணி வண்ண வுருவரோதொலைவி லாக்கத வந்துணை நீக்குமே.
சொற்பிரிப்பு
மலையில் நீடு இருக்கும் மறைக்காடரோ!கலைகள் வந்து இறைஞ்சும் கழல் ஏத்தரோ!விலை இல் மாமணி வண்ண உருவரோ!தொலைவு இலாக் கதவம் துணை நீக்குமே!
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

6

பூக்குந் தாழை புறணி அருகெலாம்ஆக்குந் தண்பொழில் சூழ்மறைக் காடரோஆர்க்குங் காண்பரி யீர்அடி கேள்உமைநோக்கிக் காணக் கதவைத் திறவுமே.
சொற்பிரிப்பு
பூக்கும் தாழை புறணி அருகு எலாம்ஆக்கும் தண்பொழில் சூழ் மறைக்காடரோ!ஆர்க்கும் காண்பு அரியீர்! அடிகேள்! உமைநோக்கிக் காணக் கதவைத் திறவுமே!
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

7

வெந்த வெண்பொடிப் பூசும் விகிர்தரோஅந்த மில்லி அணிமறைக் காடரோஎந்தை நீயடி யார்வந் திறைஞ்சிடஇந்த மாக்கத வம்பிணி நீக்குமே.
சொற்பிரிப்பு
வெந்த வெண்பொடிப் பூசும் விகிர்தரோ!அந்தம் இ(ல்)லி, அணி மறைக்காடரோ!எந்தை! நீ அடியார் வந்து இறைஞ்சிடஇந்த மாக்கதவம் பிணி நீக்குமே!
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

8

ஆறு சூடும் அணிமறைக் காடரோகூறு மாதுமைக் கீந்த குழகரோஏற தேறிய எம்பெரு மானிந்தமாறி லாக்கத வம்வலி நீக்குமே.
சொற்பிரிப்பு
ஆறு சூடும் அணி மறைக்காடரோ!கூறு மாது உமைக்கு ஈந்த குழகரோ!ஏறு அது ஏறிய எம்பெருமான்! இந்தமாறு இலாக் கதவம் வலி நீக்குமே!
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

9

சுண்ண வெண்பொடிப் பூசுஞ் சுவண்டரோபண்ணி யேறுகந் தேறும் பரமரோஅண்ண லாதி அணிமறைக் காடரோதிண்ண மாக்கத வந்திறப் பிம்மினே.
சொற்பிரிப்பு
சுண்ண வெண்பொடிப் பூசும் சுவண்டரோ!பண்ணி ஏறு உகந்து ஏறும் பரமரோ!அண்ணல், ஆதி, அணி மறைக்காடரோ!திண்ணமாக் கதவம் திறப்பிம்மினே!
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

10

விண்ணு ளார்விரும் பியெதிர் கொள்ளவேமண்ணு ளார்வணங் கும்மறைக் காடரோகண்ணி னாலுமைக் காணக் கதவினைத்திண்ண மாகத் திறந்தருள் செய்ம்மினே.
சொற்பிரிப்பு
விண் உளார் விரும்பி எதிர் கொள்ளவேமண் உளார் வணங்கும் மறைக்காடரோ!கண்ணினால் உமைக் காணக் கதவினைத்திண்ணம் ஆகத் திறந்து அருள் செய்ம்மினே!
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

11

அரக்க னைவிர லாலடர்த் திட்டநீர்இரக்க மொன்றிலீர் எம்பெரு மானிரேசுரக்கும் புன்னைகள் சூழ்மறைக் காடரோசரக்க விக்கத வந்திறப் பிம்மினே.
சொற்பிரிப்பு
அரக்கனை விரலால் அடர்த்திட்ட நீர்இரக்கம் ஒன்று இலீர்; எம்பெருமானிரே!சுரக்கும் புன்னைகள் சூழ் மறைக்காடரோ!சரக்க இக்கதவம் திறப்பிம்மினே!
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.