1
பாற லைத்த படுவெண் டலையினன்நீற லைத்தசெம் மேனியன் நேரிழைகூற லைத்தமெய் கோளர வாட்டியஆற லைத்த சடைஅன்னி யூரரே.
சொற்பிரிப்பு
பாறு அலைத்த படுவெண் தலையினன்;நீறு அலைத்த செம் மேனியன் நேரிழைகூறு அலைத்த மெய், கோள் அரவு ஆட்டியஆறு அலைத்த சடை, அன்னியூரனே.
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.