1
கொக்க ரைகுழல் வீணை கொடுகொட்டிபக்க மேபகு வாயன பூதங்கள்ஒக்க ஆட லுகந்துடன் கூத்தராய்அக்கி னோடர வார்ப்பர்ஆ ரூரரே.
சொற்பிரிப்பு
கொக்கரை, குழல், வீணை, கொடுகொட்டி,பக்கமே பகுவாயன பூதங்கள்ஒக்க ஆடல் உகந்து உடன் கூத்தராய்,அக்கினோடு அரவு ஆர்ப்பர் ஆரூரரே.
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.