திருமுறை 5 · 5.005 · 10

திருவண்ணாமலை

அருளியவர்
திருநாவுக்கரசர்
பண்
திருக்குறுந்தொகை
தலம்
அண்ணாமலை
நாடு
நடுநாடு

1

பட்டி ஏறுகந் தேறிப் பலஇலம்இட்ட மாக இரந்துண் டுழிதரும்அட்ட மூர்த்திஅண் ணாமலை கைதொழக்கெட்டுப் போம்வினை கேடில்லை காண்மினே.
சொற்பிரிப்பு
பட்டி ஏறு உகந்து ஏறிப், பல இ(ல்)லம்இட்டம்ஆகஇரந்து உண்டு, உழிதரும்அட்டமூர்த்தி அண்ணாமலை கைதொழக்கெட்டுப் போம் வினை; கேடு இல்லை; காண்மினே!
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

2

பெற்ற மேறுவர் பெய்பலிக் கென்றவர்சுற்ற மாமிகு தொல்புக ழாளொடும்அற்றந் தீர்க்கும்அண் ணாமலை கைதொழநற்ற வத்தொடு ஞானத் திருப்பரே.
சொற்பிரிப்பு
பெற்றம் ஏறுவர், பெய் பலிக்கு என்றவர்;சுற்றம் மாமிகு தொல் புகழாளொடும்அற்றம் தீர்க்கும் அண்ணாமலை கைதொழநற்றவத்தொடு ஞானத்து இருப்பரே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

3

பல்லி லோடுகை யேந்திப் பலஇலம்ஒல்லை சென்றுணங் கல்கவர் வாரவர்அல்லல் தீர்க்கும்அண் ணாமலை கைதொழநல்ல வாயின நம்மை அடையுமே.
சொற்பிரிப்பு
பல் இல் ஓடு கை ஏந்திப் பல இ(ல்)லம்ஒல்லை சென்று உணங்கல் கவர்வார் அவர்,அல்லல் தீர்க்கும், அண்ணாமலை கைதொழநல்ல ஆயின நம்மை அடையுமே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

4

பாடிச் சென்று பலிக்கென்று நின்றவர்ஓடிப் போயினர் செய்வதொன் றென்கொலோஆடிப் பாடிஅண் ணாமலை கைதொழஓடிப் போகும்நம் மேலை வினைகளே.
சொற்பிரிப்பு
பாடிச் சென்று பலிக்கு என்று நின்றவர்ஓடிப் போயினர்; செய்வது ஒன்று என்கொலோ?ஆடிப் பாடி அண்ணாமலை கைதொழஓடிப் போகும், நம் மேலை வினைகளே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

5

தேடிச் சென்று திருந்தடி யேத்துமின்நாடி வந்தவர் நம்மையும் ஆட்கொள்வர்ஆடிப் பாடிஅண் ணாமலை கைதொழஓடிப் போம்நம துள்ள வினைகளே.
சொற்பிரிப்பு
தேடிச் சென்று திருந்து அடி ஏத்துமின்!நாடி வந்து அவர் நம்மையும் ஆட்கொள்வர்;ஆடிப் பாடி, அண்ணாமலை கைதொழஓடிப் போம், நமது உள்ள வினைகளே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

6

கட்டி யொக்குங் கரும்பி னிடைத்துணிவெட்டி வீணைகள் பாடும் விகிர்தனார்அட்ட மூர்த்திஅண் ணாமலை மேவியநட்ட மாடியை நண்ணநன் காகுமே.
சொற்பிரிப்பு
கட்டி ஒக்கும், கரும்பின் இடைத்; துணிவெட்டி வீணைகள் பாடும் விகிர்தனார்,அட்ட மூர்த்தி, அண்ணாமலை மேவியநட்டம் ஆடியை, நண்ண நன்கு ஆகுமே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

7

கோணிக் கொண்டையர் வேடமுன் கொண்டவர்பாணி நட்டங்க ளாடும் பரமனார்ஆணிப் பொன்னினண் ணாமலை கைதொழப்பேணி நின்ற பெருவினை போகுமே.
சொற்பிரிப்பு
கோணிக் கொண்டையர் வேடம் முன் கொண்டவர்,பாணி நட்டங்கள் ஆடும் பரமனார்,ஆணிப் பொன்னின், அண்ணாமலை கைதொழப்பேணி நின்ற பெருவினை போகுமே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

8

கண்டந் தான்கறுத் தான்காலன் ஆருயிர்பண்டு கால்கொடு பாய்ந்த பரமனார்அண்டத் தோங்கும்அண் ணாமலை கைதொழவிண்டு போகுநம் மேலை வினைகளே.
சொற்பிரிப்பு
கண்டம் தான் கறுத்தான், காலன் ஆர் உயிர்பண்டு கால்கொடு பாய்ந்த பரமனார்,அண்டத்து ஓங்கும் அண்ணாமலை கைதொழவிண்டு போகும், நம் மேலை வினைகளே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

9

முந்திச் சென்றுமுப் போதும் வணங்குமின்அந்தி வாயொளி யான்றன்அண் ணாமலைசிந்தி யாஎழு வார்வினை தீர்த்திடுங்கந்த மாமலர் சூடுங் கருத்தனே.
சொற்பிரிப்பு
முந்திச் சென்று முப்போதும் வணங்குமின்,அந்தி வாய் ஒளியான் தன் அண்ணாமலை!சிந்தியாஎழுவார் வினை தீர்த்திடும்,கந்த மாமலர் சூடும் கருத்தனே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

10

மறையி னானொடு மாலவன் காண்கிலாநிறையும் நீர்மையுள் நின்றருள் செய்தவன்உறையும் மாண்பின்அண் ணாமலை கைதொழப்பறையும் நாஞ்செய்த பாவங்க ளானவே.
சொற்பிரிப்பு
மறையினானொடு மால் அவன் காண்கிலாநிறையும் நீர்மையுள் நின்று அருள் செய்தவன்உறையும் மாண்பின் அண்ணாமலை கைதொழப்பறையும், நாம் செய்த பாவங்கள் ஆனவே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.