1
கடவுளைக் கடலுள் எழு நஞ்சுண்டஉடலு ளானையொப் பாரி* லாதவெம்அடலு ளானை அரத்துறை மேவியசுடரு ளானைக்கண் டீர்நாந் தொழுவதே.(^ ஒப்பாரி இலாத என்றும் பாடம்)
சொற்பிரிப்பு
கடவுளைக், கடலுள் எழு நஞ்சுண்டஉடல் உளானை, ஒப்பாரிலாத எம்அடல் உ ளானை, அரத்துறை மேவியசுடர் உ ளானைக், கண்டீர் நாம் தொழுவதே.
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.