திருமுறை 5 · 5.002 · 10

கோயில்

அருளியவர்
திருநாவுக்கரசர்
பண்
திருக்குறுந்தொகை
தலம்
கோயில் (சிதம்பரம், தில்லை)
நாடு
சோழநாடு காவிரி வடகரை

1

பனைக்கை மும்மத வேழ முரித்தவன்நினைப்ப வர்மனங் கோயிலாக் கொண்டவன்அனைத்தும் வேடமாம் அம்பலக் கூத்தனைத்தினைத்த னைப்பொழு தும்மறந் துய்வனோ.
சொற்பிரிப்பு
பனைக்கை மும்மத வேழம் உரித்தவன்,நினைப்பவர் மனம் கோயிலாக் கொண்டவன்,அனைத்தும் வேடமாம் அம்பலக் கூத்தனைத்,தினைத்தனைப் பொழுதும் மறந்து உய்வனோ?
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

2

தீர்த்த னைச்சிவ னைச்சிவ லோகனைமூர்த்தி யைமுத லாய ஒருவனைப்பார்த்த னுக்கருள் செய்த சிற்றம்பலக்கூத்த னைக்கொடி யேன்மறந் துய்வனோ.
சொற்பிரிப்பு
தீர்த்தனைச், சிவனைச், சிவ லோகனைமூர்த்தியை, முதல் ஆய ஒருவனைப்,பார்த்தனுக்கு அருள் செய்த சிற்றம்பலக்கூத்தனைக், கொடியேன் மறந்து உய்வனோ?
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

3

கட்டும் பாம்புங் கபாலங் கைமான்மறிஇட்ட மாயிடு காட்டெரி யாடுவான்சிட்டர் வாழ்தில்லை யம்பலக் கூத்தனைஎட்ட னைப்பொழு தும்மறந் துய்வனோ.
சொற்பிரிப்பு
கட்டும் பாம்பும், கபாலம், கை மான்மறி,இட்டம் ஆய் இடுகாட்டு எரி ஆடுவான்,சிட்டர் வாழ்தில்லை அம்பலக் கூத்தனை,எள்-தனைப் பொழுதும் மறந்து உய்வனோ?
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

4

மாணி பால்கறந் தாட்டி வழிபடநீணு லகெலாம் ஆளக் கொடுத்தவன்ஆணி யைச்செம்பொன் அம்பலத் துள்நின்றதாணு வைத்தமி யேன்மறந் துய்வனோ.
சொற்பிரிப்பு
மாணி பால் கறந்துஆட்டி வழிபடநீண் உலகு எலாம் ஆளக் கொடுத்த என்ஆணியைச், செம்பொன் அம்பலத்துள் நின்றதாணுவைத், தமியேன் மறந்து உய்வனோ?
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

5

பித்த னைப்பெருங் காடரங் காவுடைமுத்த னைமுளை வெண்மதி சூடியைச்சித்த னைச்செம்பொன் அம்பலத் துள்நின்றஅத்த னையடி யேன்மறந் துய்வனோ.
சொற்பிரிப்பு
பித்தனைப், பெருங்காடு அரங்கா உடைமுத்தனை, முளை வெண்மதி சூடியைச்சித்தனைச், செம்பொன் அம்பலத்துள் நின்றஅத்தனை, அடியேன் மறந்து உய்வனோ?
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

6

நீதி யைநிறை வைமறை நான்குடன்ஓதி யையொரு வர்க்கு மறிவொணாச்சோதி யைச்சுடர்ச் செம்பொனின் அம்பலத்தாதி யையடி யேன்மறந் துய்வனோ.
சொற்பிரிப்பு
நீதியை, நிறைவை, மறை நான்குடன்ஓதியை, ஒருவர்க்கும் அறிவு ஒணாச்சோதியைச், சுடர்ச் செம்பொனின் அம்பலத்துஆதியை, அடியேன் மறந்து உய்வனோ?
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

7

மைகொள் கண்டனெண் டோ ளன்முக் கண்ணினன்பைகொள் பாம்பரை யார்த்த பரமனார்செய்ய மாதுறை சிற்றம்ப லத்தெங்கள்ஐய னையடி யேன்மறந் துய்வனோ.
சொற்பிரிப்பு
மைகொள் கண்டன், எண் தோளன், முக்கண்ணினன்,பைகொள் பாம்பு அரை ஆர்த்த பரமனார்,செய்ய மாது உறை சிற்றம்பலத்து எங்கள்ஐயனை, அடியேன் மறந்து உய்வனோ?
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

8

முழுதும் வானுல கத்துள தேவர்கள்தொழுதும் போற்றியுந் தூயசெம் பொன்னினால்எழுதி மேய்ந்தசிற் றம்பலக் கூத்தனைஇழுதை யேன்மறந் தெங்ஙனம் உய்வனோ.
சொற்பிரிப்பு
முழுதும் வான் உலகத்து உள தேவர்கள்தொழுதும் போற்றியும் தூய செம்பொன்னினால்எழுதி மேய்ந்த சிற்றம்பலக் கூத்தனைஇழுதையேன் மறந்து எங்ஙனம் உய்வனோ?
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

9

காரு லாமலர்க் கொன்றையந் தாரனைவாரு லாமுலை மங்கை மணாளனைத்தேரு லாவிய தில்லையுட் கூத்தனைஆர்கி லாவமு தைமறந் துய்வனோ.
சொற்பிரிப்பு
கார் உலா மலர்க் கொன்றை அம் தாரனை,வார்உலா முலை மங்கை மணாளனைத்,தேர் உலாவிய தில்லையுள் கூத்தனை,ஆர்கிலா அமுதை, மறந்து உய்வனோ?
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

10

ஓங்கு மால்வரை ஏந்தலுற் றான்சிரம்வீங்கி விம்முற ஊன்றிய தாளினான்தேங்கு நீர்வயல் சூழ்தில்லைக் கூத்தனைப்பாங்கி லாத்தொண்ட னேன்மறந் துய்வனோ.
சொற்பிரிப்பு
ஓங்கு மால்வரை ஏந்தல் உற்றான் சிரம்வீங்கி விம்முற ஊன்றிய தாளினான்,தேங்கு நீர்வயல் சூழ் தில்லைக் கூத்தனைப்,பாங்கு இலாத் தொண்டனேன், மறந்து உய்வனோ?
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.