1
அன்னம் பாலிக்குந் தில்லைச்சிற் றம்பலம்பொன்னம் பாலிக்கு மேலுமிப் பூமிசைஎன்னம் பாலிக்கு மாறுகண் டின்புறஇன்னம் பாலிக்கு மோவிப் பிறவியே.
சொற்பிரிப்பு
அன்னம் பாலிக்கும் தில்லைச் சிற்றம்பலம்பொன்னம் பாலிக்கும்; மேலும், இப் பூமிசைஎன் அன்பு ஆலிக்கும் ஆறு கண்டு, இன்புறஇன்னம் பாலிக்குமோ இப் பிறவியே.
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.