திருமுறை 4 · 4.099 · 10

திருவேகம்பம்

அருளியவர்
திருநாவுக்கரசர்
பண்
திருவிருத்தம்
தலம்
கச்சி ஏகம்பம் (காஞ்சிபுரம்)
நாடு
தொண்டைநாடு

1

ஓதுவித் தாய்முன் அறவுரை காட்டி அமணரொடேகாதுவித் தாய்கட்ட நோய்பிணி தீர்த்தாய் கலந்தருளிப்போதுவித் தாய்நின் பணிபிழைக் கிற்புளி யம்வளாரால்மோதுவிப் பாய்உகப் பாய்முனி வாய்கச்சி யேகம்பனே.
சொற்பிரிப்பு
ஓதுவித்தாய் முன் அறஉரை காட்டி அமணரொடேகாதுவித்தாய் கட்டம் நோய் பிணி தீர்த்தாய் கலந்து அருளிப்போதுவித்தாய் நின் பணி பிழைக்கின் புளியம் வளாரால்மோதுவிப்பாய் உகப்பாய் முனிவாய் கச்சி ஏகம்பனே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

2

எத்தைக்கொண் டெத்தகை ஏழை அமணொ டிசைவித்தெனைக்கொத்தைக்கு மூங்கர் வழிகாட்டு வித்தென்னக் கோகுசெய்தாய்முத்தின் திரளும் பளிங்கினிற் சோதியும் மொய்பவளத்தொத்தினை யேய்க்கும் படியாய் பொழிற்கச்சி யேகம்பனே.
சொற்பிரிப்பு
எத்தைக் கொண்டு எத்தகை ஏழை அமணொடு இசைவித்து எனைக்கொத்தைக்கு மூங்கர் வழிகாட்டுவித் தென்னக் கோகு செய்தாய்முத்தின் திரளும் பளிங்கினின் சோதியும் மொய் பவளத்தொத்தினை ஏய்க்கும் படியாய் பொழில் கச்சி ஏகம்பனே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

3

மெய்யம்பு கோத்த விசயனோ டன்றொரு வேடுவனாய்ப்பொய்யம்பெய் தாவ மருளிச்செய் தாய்புர மூன்றெரியக்கையம்பெய் தாய்நுன் கழலடி போற்றாக் கயவர்நெஞ்சிற்குய்யம்பெய் தாய்கொடி மாமதில் சூழ்கச்சி யேகம்பனே.
சொற்பிரிப்பு
மெய் அம்பு கோத்த விசயனோடு அன்று ஒரு வேடுவனாய்ப்பொய் அம்பு எய்து ஆவம் அருளிச் செய்தாய் புரம் மூன்று எரியக்கை அம்பு எய்தாய் நுன் கழல்அடி போற்றாக் கயவர் நெஞ்சில்குய்யம் பெய்தாய் கொடி மாமதில் சூழ் கச்சி ஏகம்பனே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

4

குறிக்கொண் டிருந்துசெந் தாமரை ஆயிரம் வைகல்வைகல்நெறிப்பட இண்டை புனைகின்ற மாலை நிறையழிப்பான்கறைக்கண்ட நீயொரு பூக்குறை வித்துக்கண் சூல்விப்பதேபிறைத்துண்ட வார்சடை யாய்பெருங் காஞ்சியெம் பிஞ்ஞகனே.
சொற்பிரிப்பு
குறிக்கொண்டு இருந்து செந்தாமரை ஆயிரம் வைகல் வைகல்நெறிப்பட இண்டை புனைகின்ற மாலை நிறை அழிப்பான்கறைக்கண்ட நீ ஒரு பூக் குறைவித்துக் கண் சூல்விப்பதேபிறைத் துண்ட வார்சடையாய் பெருங் காஞ்சி எம் பிஞ்ஞகனே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

5

உரைக்குங் கழிந்திங் குணர்வரி யான்உள்கு வார்வினையைக்கரைக்கு மெனக்கை தொழுவதல் லாற்கதி ரோர்களெல்லாம்விரைக்கொண் மலரவன் மால்எண் வசுக்கள்ஏ காதசர்கள்இரைக்கும் அமிர்தர்க் கறியவொண் ணானெங்கள் ஏகம்பனே.
சொற்பிரிப்பு
உரைக்கும் கழிந்து இங்கு உணர்வு அரியான் உள்குவார் வினையைக்கரைக்கும் எனக் கை தொழுவது அல்லால் கதிரோர்கள் எல்லாம்விரைக்கொள் மலரவன் மால் எண் வசுக்கள் ஏகாதசர்கள்இரைக்கும் அமிர்தர்க்கு அறிய ஒண்ணான் எங்கள் ஏகம்பனே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

6

கருவுற்ற நாள்முத லாகவுன் பாதமே காண்பதற்குஉருகிற்றென் னுள்ளமும் நானுங் கிடந்தலந் தெய்த்தொழிந்தேன்திருவொற்றி யூரா திருவால வாயா திருவாரூராஒருபற் றிலாமையுங் கண்டிரங் காய்கச்சி யேகம்பனே.
சொற்பிரிப்பு
கருவுற்ற நாள் முதல் ஆக உன் பாதமே காண்பதற்குஉருகிற்று என் உள்ளமும் நானும் கிடந்து அலந்து எய்த்தொழிந்தேன்திருவொற்றியூரா திருஆலவாயா திருஆரூராஒரு பற்று இலாமையும் கண்டு இரங்காய் கச்சி ஏகம்பனே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

7

அரிஅயன் இந்திரன் சந்திரா தித்தர் அமரரெல்லாம்உரியநின் கொற்றக் கடைத்தலை யார்உணங் காக்கிடந்தார்புரிதரு புன்சடைப் போக முனிவர் புலம்புகின்றார்எரிதரு செஞ்சடை ஏகம்ப என்னோ திருக்குறிப்பே.
சொற்பிரிப்பு
அரி அயன் இந்திரன் சந்திர ஆதித்தர் அமரர் எல்லாம்உரிய நின் கொற்றக் கடைத்தலையார் உணங்காக் கிடந்தார்புரிதரு புன்சடைப் போக முனிவர் புலம்புகின்றார்எரிதரு செஞ்சடை ஏகம்ப என்னோ திருக்குறிப்பே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

8

பாம்பரைச் சேர்த்திப் படருஞ் சடைமுடிப் பால்வண்ணனேகூம்பலைச் செய்த கரதலத் தன்பர்கள் கூடிப்பன்னாள்சாம்பலைப் பூசித் தரையிற் புரண்டுநின் றாள்சரணென்றேம்பலிப் பார்கட் கிரங்குகண் டாய்கச்சி யேகம்பனே.
சொற்பிரிப்பு
பாம்பு அரைச் சேர்த்திப் படரும் சடைமுடிப் பால் வண்ணனேகூம்பலைச் செய்த கரதலத்து அன்பர்கள் கூடிப் பல்நாள்சாம்பலைப் பூசித் தரையில் புரண்டு நின் தாள் சரண் என்றுஏம்பலிப்பார்கட்கு இரங்கு கண்டாய் கச்சி ஏகம்பனே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

9

ஏன்றுகொண் டாயென்னை எம்பெரு மானினி யல்லமென்னிற்சான்றுகண் டாய்இவ் வுலகமெல் லாந்தனி யேனென்றென்னைஊன்றிநின் றாரைவர்க் கொற்றிவைத் தாய்பின்னை ஒற்றியெல்லாஞ்சோன்றுகொண் டாய்கச்சி யேகம்ப மேய சுடர்வண்ணனே.
சொற்பிரிப்பு
ஏன்று கொண்டாய் என்னை எம்பெருமான் இனி அல்லம் என்னில்சான்று கண்டாய் இவ்உலகம் எல்லாம் தனியேன் என்று என்னைஊன்றி நின்றார் ஐவர்க்கு ஒற்றிவைத்தாய் பின்னை ஒற்றி எல்லாம்சோன்று கொண்டாய் கச்சி ஏகம்பம் மேய சுடர்வண்ணனே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

10

உந்திநின் றாருன்றன் ஓலக்கச் சூளைகள் வாய்தல்பற்றித்துன்றிநின் றார்தொல்லை வானவ ரீட்டம் பணியறிவான்வந்துநின் றாரய னுந்திரு மாலும் மதிற்கச்சியாய்இந்தநின் றோமினி எங்ஙன மோவந் திறைஞ்சுவதே.
சொற்பிரிப்பு
உந்தி நின்றார் உன் தன் ஓலக்கச் சூளைகள் வாய்தல் பற்றித்துன்றி நின்றார் தொல்லை வானவர் ஈட்டம் பணி அறிவான்வந்து நின்றார் அயனும் திருமாலும் மதில் கச்சியாய்இந்த நின்றோம் இனி எங்ஙனமோ வந்து இறைஞ்சுவதே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.