1
அந்திவட் டத்திங்கட் கண்ணியன் ஐயா றமர்ந்துவந்தென்புந்திவட் டத்திடைப் புக்குநின் றானையும் பொய்யென்பனோசிந்திவட் டச்சடைக் கற்றை யலம்பச் சிறிதலர்ந்தநந்திவட் டத்தொடு கொன்றை வளாவிய நம்பனையே.
சொற்பிரிப்பு
அந்தி வட்டத் திங்கள் கண்ணியன் ஐயாறு அமர்ந்து வந்து என்புந்திவட்டத்து இடைப் புக்கு நின்றானையும் பொய் என்பனோசிந்திவட்டச் சடைக் கற்றை அலம்பச் சிறிது அலர்ந்தநந்திவட்டத்தொடு கொன்றை வளாவிய நம்பனையே.
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.