1
அட்டுமின் இல்பலி யென்றென் றகங்கடை தோறும்வந்துமட்டவி ழுங்குழ லார்வளை கொள்ளும் வகையென்கொலோகொட்டிய பாணி யெடுத்திட்ட பாதமுங் கோளரவும்நட்டநின் றாடிய நாதர்நல் லூரிடங் கொண்டவரே.
சொற்பிரிப்பு
அட்டுமின் இல்பலி என்று என்று அகம் கடைதோறும் வந்துமட்டு அவிழும் குழலார் வளை கொள்ளும் வகை என்கொலோகொட்டிய பாணி எடுத்திட்ட பாதமும் கோள்அரவும்நட்டம் நின்று ஆடிய நாதர் நல்லூர் இடங் கொண்டவரே.
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.