1
வானவர் தானவர் வைகல் மலர்கொணர்ந் திட்டிறைஞ்சித்தானவர் மால்பிர மன்னறி யாத தகைமையினான்ஆனவ னாதிபு ராணனன் றோடிய பன்றியெய்தகானவ னைக்கண்டி யூரண்ட வாணர் தொழுகின்றதே.
சொற்பிரிப்பு
வானவர் தானவர் வைகல் மலர் கொணர்ந்து இட்டு இறைஞ்சித்தானவர் மால் பிரமன் அறியாத தகைமையினான்ஆனவன் ஆதிபுராணன் அன்று ஓடிய பன்றி எய்தகானவனைக் கண்டியூர் அண்டவாணர் தொழுகின்றதே.
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.