1
சிந்திப் பரியன சிந்திப் பவர்க்குச் சிறந்துசெந்தேன்முந்திப் பொழிவன முத்தி கொடுப்பன மொய்த்திருண்டுபந்தித்து நின்ற பழவினை தீர்ப்பன பாம்புசுற்றிஅந்திப் பிறையணிந் தாடும்ஐ யாறன் அடித்தலமே.
சொற்பிரிப்பு
சிந்திப்பு அரியன சிந்திப் பவர்க்குச் சிறந்து செந்தேன்முந்திப் பொழிவன முத்தி கொடுப்பன மொய்த்து இருண்டுபந்தித்து நின்ற பழவினை தீர்ப்பன பாம்பு சுற்றிஅந்திப் பிறை அணிந்து ஆடும் ஐயாறன் அடித்தலமே.
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.