1
குறுவித்த வாகுற்ற நோய்வினை காட்டிக் குறுவித்தநோய்உறுவித்த வாவுற்ற நோய்வினை தீர்ப்பான் உகந்தருளிஅறிவித்த வாறடி யேனைஐ யாறன் அடிமைக்களேசெறிவித்த வாதொண்ட னேனைத்தன் பொன்னடிக் கீழெனையே.
சொற்பிரிப்பு
குறுவித்தவா குற்றம் நோய் வினை காட்டிக் குறுவித்த நோய்உறுவித்தவா உற்ற நோய் வினை தீர்ப்பான் உகந்து அருளிஅறிவித்தவாறு அடியேனை ஐயாறன் அடிமைக்களேசெறிவித்தவா தொண்டனேனைத் தன் பொன்அடிக் கீழ் எனையே.
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.