1
கையது காலெரி நாகங் கனல்விடு சூலமதுவெய்யது வேலைநஞ் சுண்ட விரிசடை விண்ணவர்கோன்செய்யினில் நீல மணங்கம ழுந்திரு வேதிகுடிஐயனை ஆரா அமுதினை நாமடைந் தாடுதுமே.
சொற்பிரிப்பு
கையது கால் எரி நாகம் கனல்விடு சூலம் அதுவெய்யது வேலை நஞ்சு உண்ட விரிசடை விண்ணவர்கோன்செய்யினில் நீலம் மணம் கமழும் திரு வேதிகுடிஐயனை ஆரா அமுதினை நாம் அடைந்து ஆடுதுமே.
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.