1
பாரிடஞ் சாடிய பல்லுயிர் வானம ரர்க்கருளிக்காரடைந் தகடல் வாயுமிழ் நஞ்சமு தாகவுண்டான்ஊரடைந் திவ்வுல கிற்பலி கொள்வது நாமறியோம்நீரடைந் தகரை நின்றநெய்த் தானத் திருந்தவனே.
சொற்பிரிப்பு
பார்இடம் சாடிய பல் உயிர் வான் அமரர்க்கு அருளிக்கார் அடைந்த கடல் வாய்உமிழ் நஞ்சு அமுது ஆக உண்டான்ஊர் அடைந்து இவ்உலகில் பலி கொள்வது நாம் அறியோம்நீர் அடைந்த கரை நின்ற நெய்த்தானத்து இருந்தவனே.
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.