1
செற்றுக் களிற்றுரி கொள்கின்ற ஞான்று செருவெண்கொம்பொன்றிற்றுக் கிடந்தது போலும் இளம்பிறை பாம்பதனைச்சுற்றிக் கிடந்தது கிம்புரி போலச் சுடரிமைக்கும்நெற்றிக்கண் மற்றதன் முத்தொக்குமா லொற்றி யூரனுக்கே.
சொற்பிரிப்பு
செற்றுக் களிற்று உரி கொள்கின்ற ஞான்று செருவெண் கொம்பு ஒன்றுஇற்றுக் கிடந்தது போலும் இளம்பிறை பாம்பு அதனைச்சுற்றிக் கிடந்தது கிம்புரி போலச் சுடர் இமைக்கும்நெற்றிக்கண் மற்று அதன் முத்து ஒக்குமால் ஒற்றியூரனுக்கே.
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.