1
காலை யெழுந்து கடிமலர் தூயன தாங்கொணர்ந்துமேலை யமரர் விரும்பு மிடம்விரை யான்மலிந்தசோலை மணங்கமழ் சோற்றுத் துறையுறை வார்சடைமேல்மாலை மதியமன் றோவெம் பிரானுக் கழகியதே.
சொற்பிரிப்பு
காலை எழுந்து கடிமலர் தூயன தாம் கொணர்ந்துமேலை அமரர் விரும்பும் இடம் விரையால் மலிந்தசோலை மணம் கமழ் சோற்றுத் துறை உறைவார் சடைமேல்மாலை மதியம் அன்றோ எம்பிரானுக்கு அழகியதே.
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.