திருமுறை 4 · 4.083 · 1

திருக்கழுமலம்

அருளியவர்
திருநாவுக்கரசர்
பண்
திருவிருத்தம்
தலம்
சீர்காழி - 12-கழுமலம்
நாடு
சோழநாடு காவிரி வடகரை

1

படையார் மழுவொன்று பற்றிய கையன் பதிவினவிற்கடையார் கொடிநெடு மாடங்க ளோங்குங் கழுமலமாம்மடைவாய்க் குருகினம் பாளை விரிதொறும் வண்டினங்கள்பெடைவாய் மதுவுண்டு பேரா திருக்கும் பெரும்பதியே.
சொற்பிரிப்பு
படைஆர் மழு ஒன்று பற்றிய கையன் பதி வினவில்கடைஆர் கொடி நெடு மாடங்கள் ஓங்கும் கழுமலமாம்மடைவாய்க் குருகு இனம் பாளை விரிதொறும் வண்டு இனங்கள்பெடைவாய் மது உண்டு பேராது இருக்கும் பெரும்பதியே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.