1
பார்கொண்டு மூடிக் கடல்கொண்ட ஞான்றுநின் பாதமெல்லாம்நாலஞ்சு புள்ளினம் ஏந்தின என்பர் நளிர்மதியங்கால்கொண்ட வண்கைச் சடைவிரித் தாடுங் கழுமலவர்க்காளன்றி மற்றுமுண் டோ அந்த ணாழி அகலிடமே.
சொற்பிரிப்பு
பார்கொண்டு மூடிக் கடல்கொண்ட ஞான்று நின் பாதம் எல்லாம்நாலஞ்சு புள் இனம் ஏந்தின என்பர் நளிர்மதியம்கால்கொண்ட வண்கைச் சடைவிரித்து ஆடும் கழுமலவர்க்குஆள் அன்றி மற்றும் உண்டோ அம்தண் ஆழி அகலிடமே.
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.