1
கருநட்ட கண்டனை அண்டத் தலைவனைக் கற்பகத்தைச்செருநட்ட மும்மதி லெய்யவல் லானைச்செந் தீமுழங்கத்திருநட்ட மாடியைத் தில்லைக் கிறையைச்சிற் றம்பலத்துப்பெருநட்ட மாடியை வானவர் கோனென்று வாழ்த்துவனே.
சொற்பிரிப்பு
கருநட்ட கண்டனை அண்டத் தலைவனைக் கற்பகத்தைச்செருநட்ட மும்மதில் எய்ய வல்லானைச் செந்தீ முழங்கத்திருநட்டம் ஆடியைத் தில்லைக்கு இறையைச் சிற்றம்பலத்துப்பெருநட்டம் ஆடியை வானவர் கோன் என்று வாழ்த்துவனே.
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.