திருமுறை 4 · 4.080 · 10

கோயில்

அருளியவர்
திருநாவுக்கரசர்
பண்
திருவிருத்தம்
தலம்
கோயில் (சிதம்பரம், தில்லை)
நாடு
சோழநாடு காவிரி வடகரை

1

பாளையு டைக்கமு கோங்கிப்பன் மாடம்நெ ருங்கியெங்கும்வாளையு டைப்புனல் வந்தெறி வாழ்வயல் தில்லைதன்னுள்ஆளவு டைக்கழற் சிற்றம்ப லத்தரன் ஆடல்கண்டாற்பீளையு டைக்கண்க ளாற்பின்னைப் பேய்த்தொண்டர் காண்பதென்னே.
சொற்பிரிப்பு
பாளை உடைக் கமுகு ஓங்கிப் பல் மாடம் நெருங்கி எங்கும்வாளை உடைப் புனல் வந்து எறி வாழ் வயல் தில்லை தன்னுள்ஆள உடைக் கழல் சிற்றம் பலத்து அரன் ஆடல் கண்டால்பீளை உடைக் கண்களால் பின்னைப் பேய்த்தொண்டர் காண்பது என்னே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

2

பொருவிடை யொன்றுடைப் புண்ணிய மூர்த்தி புலியதளன்உருவுடை யம்மலை மங்கைம ணாளன் உலகுக்கெல்லாந்திருவுடை அந்தணர் வாழ்கின்ற தில்லைச்சிற் றம்பலவன்திருவடி யைக்கண்ட கண்கொண்டு மற்றினிக் காண்பதென்னே.
சொற்பிரிப்பு
பொருவிடை ஒன்றுடைப் புண்ணிய மூர்த்தி புலி அதளன்உருவுடை அம்மலை மங்கை மணாளன் உலகுக்கு எல்லாம்திருவுடை அந்தணர் வாழ்கின்ற தில்லைச் சிற்றம்பலவன்திருவடியைக் கண்ட கண்கொண்டு மற்று இனிக் காண்பது என்னே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

3

தொடுத்த மலரொடு தூபமுஞ் சாந்துங்கொண் டெப்பொழுதும்அடுத்து வணங்கும் அயனொடு மாலுக்குங் காண்பரியான்பொடிக்கொண் டணிந்துபொன் னாகிய தில்லைச்சிற் றம்பலவன்உடுத்த துகில்கண்ட கண்கொண்டு மற்றினிக் காண்பதென்னே.
சொற்பிரிப்பு
தொடுத்த மலரொடு தூபமும் சாந்தும் கொண்டு எப்பொழுதும்அடுத்து வணங்கும் அயனொடு மாலுக்கும் காண்பு அரியான்பொடிக்கொண்டு அணிந்து பொன் ஆகிய தில்லைச் சிற்றம்பலவன்உடுத்த துகில் கண்ட கண்கொண்டு மற்று இனிக் காண்பது என்னே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

4

வைச்ச பொருள்நமக் காகுமென் றெண்ணி நமச்சிவாயஅச்ச மொழிந்தேன் அணிதில்லை யம்பலத் தாடுகின்றபிச்சன் பிறப்பிலி பேர்நந்தி உந்தியின் மேலசைத்தகச்சின் அழகுகண் டாற்பின்னைக் கண்கொண்டு காண்பதென்னே.
சொற்பிரிப்பு
வைச்ச பொருள் நமக்கு ஆகும் என்று எண்ணி நமச்சிவாயஅச்சம் ஒழிந்தேன் அணி தில்லை அம்பலத்து ஆடுகின்றபிச்சன் பிறப்பிலி பேர்நந்தி உந்தியின் மேல் அசைத்தகச்சின் அழகுகண்டால் பின்னைக் கண்கொண்டு காண்பது என்னே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

5

செய்ஞ்ஞின்ற நீல மலர்கின்ற தில்லைச்சிற் றம்பலவன்மைஞ்ஞின்ற ஒண்கண் மலைமகள் கண்டு மகிழ்ந்துநிற்கநெய்ஞ்ஞின் றெரியும் விளக்கொத்த நீல மணிமிடற்றான்கைஞ்ஞின்ற ஆடல்கண் டாற்பின்னைக் கண்கொண்டு காண்பதென்னே.
சொற்பிரிப்பு
செய்ஞ்ஞின்ற நீலம் மலர்கின்ற தில்லைச் சிற்றம்பலவன்மைஞ்ஞின்ற ஒண்கண் மலைமகள் கண்டு மகிழ்ந்து நிற்கநெய்ஞ்ஞின்று எரியும் விளக்கு ஒத்த நீல மணிமிடற்றான்கைஞ்ஞின்ற ஆடல்கண்டால் பின்னைக் கண்கொண்டு காண்பது என்னே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

6

ஊனத்தை நீக்கி உலகறிய என்னை யாட்கொண்டவன்தேனொத் தெனக்கினி யான்தில்லைச் சிற்றம் பலவனெங்கோன்வானத் தவருய்ய வன்னஞ்சை யுண்டகண் டத்திலங்கும்ஏனத் தெயிறு கண்டாற்பின்னைக் கண்கொண்டு காண்பதென்னே.
சொற்பிரிப்பு
ஊனத்தை நீக்கி உலகுஅறிய என்னை ஆட்கொண்டவன்தேன் ஒத்து எனக்கு இனியான் தில்லைச் சிற்றம்பலவன் எம் கோன்வானத்தவர் உய்ய வன் நஞ்சை உண்ட கண்டத்து இலங்கும்ஏனத்து எயிறு கண்டால் பின்னைக் கண்கொண்டு காண்பது என்னே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

7

தெரித்த கணையாற் திரிபுர மூன்றுஞ்செந் தீயின்மூழ்கஎரித்த இறைவன் இமையவர் கோமான் இணையடிகள்தரித்த மனத்தவர் வாழ்கின்ற தில்லைச்சிற் றம்பலவன்சிரித்த முகங்கண்ட கண்கொண்டு மற்றினிக் காண்பதென்னே.
சொற்பிரிப்பு
தெரித்த கணையால் திரிபுரம் மூன்றும் செந்தீயில் மூழ்கஎரித்த இறைவன் இமையவர் கோமான் இணைஅடிகள்தரித்த மனத்தவர் வாழ்கின்ற தில்லைச் சிற்றம்பலவன்சிரித்த முகம் கண்ட கண்கொண்டு மற்று இனிக் காண்பது என்னே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

8

சுற்று மமரர் சுரபதி நின்திருப் பாதமல்லால்பற்றொன் றிலோமென் றழைப்பப் பரவையுள் நஞ்சையுண்டான்செற்றங் கனங்கனைத் தீவிழித் தான்றில்லை யம்பலவன்நெற்றியிற் கண்கண்ட கண்கொண்டு மற்றினிக் காண்பதென்னே.
சொற்பிரிப்பு
சுற்றும் அமரர் சுரபதி நின் திருப்பாதம் அல்லால்பற்று ஒன்று இலோம் என்று அழைப்பப் பரவையுள் நஞ்சை உண்டான்செற்று அங்கு அநங்கனைத் தீ விழித்தான் தில்லை அம்பலவன்நெற்றியில் கண்கண்ட கண்கொண்டு மற்று இனிக் காண்பது என்னே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

9

சித்தத் தெழுந்த செழுங்கம லத்தன்ன சேவடிகள்வைத்த மனத்தவர் வாழ்கின்ற தில்லைச்சிற் றம்பலவன்முத்தும் வயிரமும் மாணிக்கந் தன்னுள் விளங்கியதூமத்த மலர்கண்ட கண்கொண்டு மற்றினிக் காண்பதென்னே.
சொற்பிரிப்பு
சித்தத்து எழுந்த செழுங்கமலத்து அன்ன சேவடிகள்வைத்த மனத்தவர் வாழ்கின்ற தில்லைச் சிற்றம்பலவன்முத்தும் வயிரமும் மாணிக்கம் தன்னுள் விளங்கிய தூமத்த மலர்கண்ட கண்கொண்டு மற்று இனிக் காண்பது என்னே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

10

தருக்கு மிகுத்துத்தன் றோள்வலி யுன்னித் தடவரையைவரைக்கை களாலெடுத் தார்ப்ப மலைமகள் கோன்சிரித்துஅரக்கன் மணிமுடி பத்தும் அணிதில்லை யம்பலவன்நெருக்கி மிதித்த விரல்கண்ட கண்கொண்டு காண்பதென்னே.
சொற்பிரிப்பு
தருக்கு மிகுத்துத் தன் தோள் வலி உன்னித் தடவரையைவரைக் கைகளால் எடுத்து ஆர்ப்ப மலைமகள் கோன் சிரித்துஅரக்கன் மணிமுடி பத்தும் அணி தில்லை அம்பலவன்நெருக்கி மிதித்த விரல்கண்ட கண்கொண்டு காண்பது என்னே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.