திருமுறை 4 · 4.079 · 10

குறைந்த

அருளியவர்
திருநாவுக்கரசர்
பண்
திருநேரிசை
தலம்
பொது
நாடு
பொது

1

தம்மானங் காப்ப தாகித் தையலார் வலையு ளாழ்ந்துஅம்மானை அமுதன் றன்னை ஆதியை அந்த மாயசெம்மான ஒளிகொள் மேனிச் சிந்தையு ளொன்றி நின்றஎம்மானை நினைய மாட்டேன் என்செய்வான் தோன்றி னேனே.
சொற்பிரிப்பு
தம்மானம் காப்பது ஆகித் தையலார் வலையுள் ஆழ்ந்துஅம்மானை அமுதன் தன்னை ஆதியை அந்தம் ஆயசெம்மான ஒளிகொள் மேனிச் சிந்தையுள் ஒன்றி நின்றஎம்மானை நினைய மாட்டேன் என் செய்வான் தோன்றினேனே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

2

மக்களே மணந்த தார மவ்வயிற் றவரை யோம்புஞ்சிக்குளே யழுந்தி ஈசன் திறம்படேன் றவம தோரேன்கொப்புளே போலத் தோன்றி யதனுளே மறையக் கண்டும்இக்களே பரத்தை யோம்ப என்செய்வான் தோன்றி னேனே.
சொற்பிரிப்பு
மக்களே மணந்த தாரம் அவ்வயிற்று அவரை ஓம்பும்சிக்குளே அழுந்தி ஈசன் திறம்படேன் தவம் அது ஓரேன்கொப்புளே போலத் தோன்றி அதனுளே மறையக் கண்டும்இக்களேபரத்தை ஓம்ப என் செய்வான் தோன்றினேனே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

3

கூழையே னாக மாட்டேன் கொடுவினைக் குழியில் வீழ்ந்துஏழினின் னிசையி னாலும் இறைவனை யேத்த மாட்டேன்மாழையொண் கண்ணின் நல்ல மடந்தைமார் தமக்கும் பொல்லேன்ஏழையே னாகி நாளு மென்செய்வான் தோன்றி னேனே.
சொற்பிரிப்பு
கூழையேன் ஆக மாட்டேன் கொடுவினைக் குழியில் வீழ்ந்துஏழின் இன் இசையினாலும் இறைவனை ஏத்த மாட்டேன்மாழை ஒண் கண்ணின் நல்ல மடந்தைமார் தமக்கும் பொல்லேன்ஏழையேன் ஆகி நாளும் என் செய்வான் தோன்றினேனே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

4

முன்னையென் வினையி னாலே மூர்த்தியை நினைய மாட்டேன்பின்னைநான் பித்த னாகிப் பிதற்றுவன் பேதை யேன்நான்என்னுளே மன்னி நின்ற சீர்மைய தாயி னானைஎன்னுளே நினைய மாட்டேன் என்செய்வான் தோன்றி னேனே.
சொற்பிரிப்பு
முன்னை என் வினையினாலே மூர்த்தியை நினைய மாட்டேன்பின்னை நான் பித்தன் ஆகிப் பிதற்றுவன் பேதையேன் நான்என் உளே மன்னி நின்ற சீர்மை அது ஆயினானைஎன் உளே நினைய மாட்டேன் என் செய்வான் தோன்றினேனே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

5

கறையணி கண்டன் றன்னைக் காமரங் கற்று மில்லேன்பிறைநுதற் பேதை மாதர் பெய்வளை யார்க்கு மல்லேன்மறைநவில் நாவி னானை மன்னிநின் றிறைஞ்சி நாளும்இறையேயு மேத்த மாட்டேன் என்செய்வான் தோன்றி னேனே.
சொற்பிரிப்பு
கறை அணி கண்டன் தன்னைக் காமரம் கற்றும் இல்லேன்பிறைநுதல் பேதை மாதர் பெய்வளையார்க்கும் அல்லேன்மறை நவில் நாவினானை மன்னி நின்று இறைஞ்சி நாளும்இறையேயும் ஏத்த மாட்டேன் என் செய்வான் தோன்றினேனே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

6 Unavailable

இந்தப் பாடல் மூலத்தில் கிடைக்கப்பெறவில்லை. பாடல் வரிகள் இங்கே சேர்க்கப்படவில்லை.

இப்பதிகத்தில் 6-ம் பாடல் கிடைக்கப்பெறவில்லை.
சொற்பிரிப்பு
பாடல் கிடைக்கப்பெறவில்லை

7 Unavailable

இந்தப் பாடல் மூலத்தில் கிடைக்கப்பெறவில்லை. பாடல் வரிகள் இங்கே சேர்க்கப்படவில்லை.

இப்பதிகத்தில் 7-ம் பாடல் கிடைக்கப்பெறவில்லை.
சொற்பிரிப்பு
பாடல் கிடைக்கப்பெறவில்லை

8 Unavailable

இந்தப் பாடல் மூலத்தில் கிடைக்கப்பெறவில்லை. பாடல் வரிகள் இங்கே சேர்க்கப்படவில்லை.

இப்பதிகத்தில் 8-ம் பாடல் கிடைக்கப்பெறவில்லை.
சொற்பிரிப்பு
பாடல் கிடைக்கப்பெறவில்லை

9 Unavailable

இந்தப் பாடல் மூலத்தில் கிடைக்கப்பெறவில்லை. பாடல் வரிகள் இங்கே சேர்க்கப்படவில்லை.

இப்பதிகத்தில் 9-ம் பாடல் கிடைக்கப்பெறவில்லை.
சொற்பிரிப்பு
பாடல் கிடைக்கப்பெறவில்லை

10

வளைத்துநின் றைவர் கள்வர் வந்தெனை நடுக்கஞ் செய்யத்தளைத்துவைத் துலையை யேற்றித் தழலெரி மடுத்த நீரில்திளைத்துநின் றாடு கின்ற ஆமைபோல் தெளிவி லாதேன்இளைத்துநின் றாடு கின்றேன் என்செய்வான் தோன்றி னேனே.
சொற்பிரிப்பு
வளைத்து நின்று ஐவர் கள்வர் வந்து எனை நடுக்கம் செய்யத்தளைத்து வைத்து உலையை ஏற்றித் தழல் எரி மடுத்த நீரில்திளைத்து நின்று ஆடுகின்ற ஆமை போல் தெளிவு இலாதேன்இளைத்து நின்று ஆடுகின்றேன் என் செய்வான் தோன்றினேனே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.