1
கடும்பகல் நட்ட மாடிக் கையிலோர் கபால மேந்திஇடும்பலிக் கில்லந் தோறு முழிதரும் இறைவ னீரேநெடும்பொறை மலையர் பாவை நேரிழை நெறிமென் கூந்தற்கொடுங்குழை புகுந்த வன்றுங் கோவண மரைய தேயோ.
சொற்பிரிப்பு
கடும்பகல் நட்டம் ஆடிக் கையில் ஓர் கபாலம் ஏந்திஇடும் பலிக்கு இல்லம் தோறும் உழிதரும் இறைவனீரேநெடும்பொறை மலையர்பாவை நேரிழை நெறி மென் கூந்தல்கொடுங்குழை புகுந்த அன்றும் கோவணம் அரையதேயோ.
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.