1
மருளவா மனத்த னாகி மயங்கினேன் மதியி லாதேன்இருளவா அறுக்கும் எந்தை இணையடி நீழ லென்னும்அருளவாப் பெறுத லின்றி அஞ்சிநான் அலமந் தேற்குப்பொருளவாத் தந்த வாறே போதுபோய்ப் புலர்ந்த தன்றே.
சொற்பிரிப்பு
மருள் அவா மனத்தன் ஆகி மயங்கினேன் மதி இலாதேன்இருள் அவா அறுக்கும் எந்தை இணைஅடி நீழல் என்னும்அருள் அவாப் பெறுதல் இன்றி அஞ்சி நான் அலமந்தேற்குப்பொருள் அவாத் தந்த ஆறே போது போய்ப் புலர்ந்தது அன்றே.
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.