திருமுறை 4 · 4.075 · 10

தனித்

அருளியவர்
திருநாவுக்கரசர்
பண்
திருநேரிசை
தலம்
பொது
நாடு
பொது

1

தொண்டனேன் பட்ட தென்னே தூயகா விரியின் நன்னீர்கொண்டிருக் கோதி யாட்டிக் குங்குமக் குழம்பு சாத்திஇண்டைகொண் டேற நோக்கி ஈசனை எம்பி ரானைக்கண்டனைக் கண்டி ராதே காலத்தைக் கழித்த வாறே.
சொற்பிரிப்பு
தொண்டனேன் பட்டது என்னே தூய காவிரியின் நன்நீர்கொண்டு இருக்கு ஓதி ஆட்டிக் குங்குமக் குழம்பு சாத்திஇண்டை கொண்டு ஏற நோக்கி ஈசனை எம்பிரானைக்கண்டனைக் கண்டிராதே காலத்தைக் கழித்தவாறே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

2

பின்னிலேன் முன்னி லேன்நான் பிறப்பறுத் தருள்செய் வானேஎன்னிலேன் நாயி னேன்நான் இளங்கதிர்ப் பயலைத் திங்கட்சின்னிலா எறிக்குஞ் சென்னிச் சிவபுரத் தமர ரேறேநின்னலால் களைகண் ஆரே நீறுசே ரகலத் தானே.
சொற்பிரிப்பு
பின் இலேன் முன் இலேன் நான் பிறப்பு அறுத்து அருள்செய்வானேஎன் இலேன் நாயினேன் நான் இளங்கதிர்ப் பயலைத் திங்கள்சில் நிலா எறிக்கும் சென்னிச் சிவபுரத்து அமரர் ஏறேநின் அலால் களைகண் ஆரே நீறுசேர் அகலத்தானே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

3

கள்ளனேன் கள்ளத் தொண்டாய்க் காலத்தைக் கழித்துப் போக்கித்தெள்ளியே னாகி நின்று தேடினேன் நாடிக் கண்டேன்உள்குவார் உள்கிற் றெல்லாம் உடனிருந் தறிதி யென்றுவெள்கினேன் வெள்கி நானும் விலாவிறச் சிரித்திட் டேனே.
சொற்பிரிப்பு
கள்ளனேன் கள்ளத் தொண்டாய்க் காலத்தைக் கழித்துப் போக்கித்தெள்ளியேன் ஆகி நின்று தேடினேன் நாடிக் கண்டேன்உள்குவார் உள்கிற்று எல்லாம் உடன் இருந்து அறிதி என்றுவெள்கினேன் வெள்கி நானும் விலா இறச் சிரித்திட்டேனே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

4

உடம்பெனு மனைய கத்துள் உள்ளமே தகளி யாகமடம்படும் உணர்நெய் யட்டி உயிரெனுந் திரிம யக்கிஇடம்படு ஞானத் தீயால் எரிகொள இருந்து நோக்கில்கடம்பமர் காளை தாதை கழலடி காண லாமே.
சொற்பிரிப்பு
உடம்பு எனும் மனை அகத்துள் உள்ளமே தகளி ஆகமடம்படும் உணர் நெய் அட்டி உயிர் எனும் திரி மயக்கிஇடம் படு ஞானத் தீயால் எரிகொள இருந்து நோக்கில்கடம்பு அமர் காளை தாதை கழலடி காணல் ஆமே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

5

வஞ்சப்பெண் ணரங்கு கோயில் வாளெயிற் றரவந் துஞ்சாவஞ்சப்பெண் இருந்த சூழல் வான்றவழ் மதியந் தோயும்வஞ்சப்பெண் வாழ்க்கை யாளன் வாழ்வினை வாழ லுற்றுவஞ்சப்பெண் ணுறக்க மானேன் வஞ்சனேன் என்செய் கேனே.
சொற்பிரிப்பு
வஞ்சப் பெண் அரங்கு கோயில் வாள் எயிற்று அரவம் துஞ்சாவஞ்சப் பெண் இருந்த சூழல் வான் தவழ் மதியம் தோயும்வஞ்சப் பெண் வாழ்க்கையாளன் வாழ்வினை வாழல் உற்றுவஞ்சப் பெண் உறக்கம் ஆனேன் வஞ்சனேன் என் செய்கேனே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

6

உள்குவார் உள்ளத் தானை உணர்வெனும் பெருமை யானைஉள்கினேன் நானுங் காண்பான் உருகினேன் ஊறி யூறிஎள்கினேன் எந்தை பெம்மான் இருதலை மின்னு கின்றகொள்ளிமேல் எறும்பென் னுள்ளம் எங்ஙனங் கூடு மாறே.
சொற்பிரிப்பு
உள்குவார் உள்ளத்தானை உணர்வு எனும் பெருமையானைஉள்கினேன் நானும் காண்பான் உருகினேன் ஊறி ஊறிஎள்கினேன் எந்தை பெம்மான் இருதலை மின்னுகின்றகொள்ளிமேல் எறும்பு என் உள்ளம் எங்ஙனம் கூடுமாறே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

7

மோத்தையைக் கண்ட காக்கை போலவல் வினைகள் மொய்த்துன்வார்த்தையைப் பேச வொட்டா மயக்கநான் மயங்கு கின்றேன்சீத்தையைச் சிதம்பு தன்னைச் செடிகொள்நோய் வடிவொன் றில்லாஊத்தையைக் கழிக்கும் வண்ணம் உணர்வுதா உலக மூர்த்தீ.
சொற்பிரிப்பு
மோத்தையைக் கண்ட காக்கை போல வல் வினைகள் மொய்த்து உன்வார்த்தையைப் பேச ஒட்டா மயக்க நான் மயங்குகின்றேன்சீத்தையைச் சிதம்பு தன்னைச் செடிகொள் நோய் வடிவு ஒன்று இல்லாஊத்தையைக் கழிக்கும் வண்ணம் உணர்வு தா உலக மூர்த்தீ.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

8

அங்கத்தை மண்ணுக் காக்கி ஆர்வத்தை உனக்கே தந்துபங்கத்தைப் போக மாற்றிப் பாவித்தேன் பரமா நின்னைச்சங்கொத்த மேனிச் செல்வா சாதல்நாள் நாயேன் உன்னைஎங்குற்றாய் என்ற போதா இங்குற்றேன் என்கண் டாயே.
சொற்பிரிப்பு
அங்கத்தை மண்ணுக்கு ஆக்கி ஆர்வத்தை உனக்கே தந்துபங்கத்தைப் போக மாற்றிப் பாவித்தேன் பரமா நின்னைச்சங்கு ஒத்த மேனிச் செல்வா சாதல் நாள் நாயேன் உன்னைஎங்கு உற்றாய் என்ற போதா இங்கு உற்றேன் என் கண்டாயே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

9

வெள்ளநீர்ச் சடைய னார்தாம் வினவுவார் போல வந்தென்உள்ளமே புகுந்து நின்றார்க் குறங்குநான் புடைகள் போந்துகள்ளரோ புகுந்தீ ரென்னக் கலந்துதான் நோக்கி நக்குவெள்ளரோ மென்று நின்றார் விளங்கிளம் பிறைய னாரே.
சொற்பிரிப்பு
வெள்ள நீர்ச் சடையனார் தாம் வினவுவார் போல வந்து, என்உள்ளமே புகுந்து நின்றார்க்கு உறங்கும் நான் புடைகள் போந்துகள்ளரோ புகுந்தீர் என்னக் கலந்து தான் நோக்கி நக்குவெள்ளரோம் என்று நின்றார் விளங்கு இளம் பிறையனாரே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

10

பெருவிரல் இறைதா னூன்ற பிறையெயி றிலங்க அங்காந்தருவரை அனைய தோளான் அரக்கனன் றலறி வீழ்ந்தான்இருவரும் ஒருவ னாய உருவமங் குடைய வள்ளல்திருவடி சுமந்து கொண்டு காண்கநான் திரியு மாறே.
சொற்பிரிப்பு
பெருவிரல் இறை தான் ஊன்றப் பிறை எயிறு இலங்க அங்காந்து,அருவரை அனைய தோளான் அரக்கன் அன்று அலறி வீழ்ந்தான்இருவரும் ஒருவன் ஆய உருவம் அங்கு உடைய வள்ளல்திருவடி சுமந்து கொண்டு காண்க நான் திரியும் ஆறே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.