1
முத்தினை மணியைப் பொன்னை முழுமுதற் பவள மேய்க்குங்கொத்தினை வயிர மாலைக் கொழுந்தினை அமரர் சூடும்வித்தினை வேத வேள்விக் கேள்வியை விளங்க நின்றஅத்தனை நினைந்த நெஞ்சம் அழகிதா நினைந்த வாறே.
சொற்பிரிப்பு
முத்தினை மணியைப் பொன்னை முழுமுதல் பவளம் ஏய்க்கும்கொத்தினை வயிர மாலைக் கொழுந்தினை அமரர் சூடும்வித்தினை வேத வேள்விக் கேள்வியை விளங்க நின்றஅத்தனை நினைந்த நெஞ்சம் அழகிதா நினைந்தவாறே.
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.