திருமுறை 4 · 4.073 · 10

திருச்சேறை

அருளியவர்
திருநாவுக்கரசர்
பண்
திருநேரிசை
தலம்
சேறை
நாடு
சோழநாடு காவிரித் தென்கரை

1

பெருந்திரு இமவான் பெற்ற பெண்கொடி பிரிந்த பின்னைவருந்துவான் தவங்கள் செய்ய மாமணம் புணர்ந்து மன்னும்அருந்திரு மேனி தன்பால் அங்கொரு பாக மாகத்திருந்திட வைத்தார் சேறைச் செந்நெறிச் செல்வ னாரே.
சொற்பிரிப்பு
பெருந்திரு இமவான் பெற்ற பெண்கொடி பிரிந்த பின்னைவருந்துவான் தவங்கள் செய்ய மாமணம் புணர்ந்து மன்னும்அருந்திரு மேனி தன்பால் அங்கு ஒரு பாகம் ஆகத்திருந்திட வைத்தார் சேறைச் செந்நெறிச் செல்வனாரே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

2

ஓர்த்துள வாறு நோக்கி உண்மையை உணராக் குண்டர்வார்த்தையை மெய்யென் றெண்ணி மயக்கில்வீழ்ந் தழுந்து வேனைப்பேர்த்தெனை ஆளாக் கொண்டு பிறவிவான் பிணிக ளெல்லாந்தீர்த்தருள் செய்தார் சேறைச் செந்நெறிச் செல்வ னாரே.
சொற்பிரிப்பு
ஓர்த்து உள ஆறு நோக்கி உண்மையை உணராக் குண்டர்வார்த்தையை மெய் என்று எண்ணி மயக்கில் வீழ்ந்து அழுந்துவேனைப்பேர்த்து எனை ஆளாக் கொண்டு பிறவி வான் பிணிகள் எல்லாம்தீர்த்து அருள் செய்தார் சேறைச் செந்நெறிச் செல்வனாரே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

3

ஒன்றிய தவத்து மன்னி உடையனாய் உலப்பில் காலம்நின்றுதங் கழல்க ளேத்தும் நீள்சிலை விசய னுக்குவென்றிகொள் வேட னாகி விரும்பிவெங் கான கத்துச்சென்றருள் செய்தார் சேறைச் செந்நெறிச் செல்வ னாரே.
சொற்பிரிப்பு
ஒன்றிய தவத்து மன்னி உடையனாய் உலப்பு இல் காலம்நின்று தம் கழல்கள் ஏத்தும் நீள் சிலை விசயனுக்குவென்றிகொள் வேடன் ஆகி விரும்பி வெங்கானகத்துச்சென்று அருள் செய்தார் சேறைச் செந்நெறிச் செல்வனாரே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

4

அஞ்சையும் அடக்கி ஆற்ற லுடையனாய் அநேக காலம்வஞ்சமில் தவத்துள் நின்று மன்னிய பகீர தற்குவெஞ்சின முகங்க ளாகி விசையொடு பாயுங் கங்கைச்செஞ்சடை யேற்றார் சேறைச் செந்நெறிச் செல்வ னாரே.
சொற்பிரிப்பு
அஞ்சையும் அடக்கி ஆற்றல் உடையனாய் அநேக காலம்வஞ்சம் இல் தவத்துள் நின்று மன்னிய பகீரதற்குவெஞ்சின முகங்கள் ஆகி விசையொடு பாயும் கங்கைசெஞ்சடை ஏற்றார் சேறைச் செந்நெறிச் செல்வனாரே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

5

நிறைந்தமா மணலைக் கூப்பி நேசமோ டாவின் பாலைக்கறந்துகொண் டாட்டக் கண்டு கறுத்ததன் தாதை தாளைஎறிந்தமா ணிக்கப் போதே எழில்கொள்சண் டீசன் என்னச்சிறந்தபே றளித்தார் சேறைச் செந்நெறிச் செல்வ னாரே.
சொற்பிரிப்பு
நிறைந்த மா மணலைக் கூப்பி நேசமோடு ஆவின் பாலைக்கறந்துகொண்டு ஆட்டக் கண்டு கறுத்த தன் தாதை தாளைஎறிந்த மாணிக்கு அப்போதே எழில்கொள் சண்டீசன் என்னச்சிறந்த பேறு அளித்தார் சேறைச் செந்நெறிச் செல்வனாரே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

6

விரித்தபல் கதிர்கொள் சூலம் வெடிபடு தமரு கங்கைதரித்ததோர் கோல காலப் பயிரவ னாகி வேழம்உரித்துமை யஞ்சக் கண்டு ஒண்டிரு மணிவாய் விள்ளச்சிரித்தருள் செய்தார் சேறைச் செந்நெறிச் செல்வ னாரே.
சொற்பிரிப்பு
விரித்த பல் கதிர்கொள் சூலம் வெடிபடு தமருகம் கைதரித்தது ஓர் கோல கால பயிரவன் ஆகி வேழம்உரித்து, உமை அஞ்சக் கண்டு ஒண் திரு மணிவாய் விள்ளச்சிரித்து அருள் செய்தார் சேறைச் செந்நெறிச் செல்வனாரே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

7

சுற்றுமுன் இமையோர் நின்று தொழுதுதூ மலர்கள் தூவிமற்றெமை உயக்கொள் என்ன மன்னுவான் புரங்கள் மூன்றும்உற்றொரு நொடியின் முன்னம் ஒள்ளழல் வாயின் வீழச்செற்றருள் செய்தார் சேறைச் செந்நெறிச் செல்வ னாரே.
சொற்பிரிப்பு
சுற்றும் முன் இமையோர் நின்று தொழுது தூ மலர்கள் தூவிமற்று எமை உயக்கொள் என்ன மன்னு வான் புரங்கள் மூன்றும்உற்று ஒரு நொடியின் முன்னம் ஒள் அழல் வாயின் வீழச்செற்று அருள் செய்தார் சேறைச் செந்நெறிச் செல்வனாரே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

8

முந்தியிவ் வுலக மெல்லாம் படைத்தவன் மாலி னோடும்எந்தனி நாத னேயென் றிறைஞ்சிநின் றேத்தல் செய்யஅந்தமில் சோதி தன்னை அடிமுடி யறியா வண்ணஞ்செந்தழ லானார் சேறைச் செந்நெறிச் செல்வ னாரே.
சொற்பிரிப்பு
முந்தி இவ் உலகம் எல்லாம் படைத்தவன் மாலினோடும்எம் தனி நாதனே என்று இறைஞ்சி நின்று ஏத்தல் செய்யஅந்தம் இல் சோதி தன்னை அடிமுடி அறியா வண்ணம்செந்தழல் ஆனார் சேறைச் செந்நெறிச் செல்வனாரே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

9 Unavailable

இந்தப் பாடல் மூலத்தில் கிடைக்கப்பெறவில்லை. பாடல் வரிகள் இங்கே சேர்க்கப்படவில்லை.

இப்பதிகத்தில் 9-ம் பாடல் கிடைக்கப்பெறவில்லை.
சொற்பிரிப்பு
பாடல் கிடைக்கப்பெறவில்லை

10

ஒருவரும் நிக ரிலாத ஒண்டிறல் அரக்கன் ஓடிப்பெருவரை யெடுத்த திண்டோ ள் பிறங்கிய முடிகள் இற்றுமருவியெம் பெருமா னென்ன மலரடி மெள்ள வாங்கித்திருவருள் செய்தார் சேறைச் செந்நெறிச் செல்வ னாரே.
சொற்பிரிப்பு
ஒருவரும் நிகர் இலாத ஒண்திறல் அரக்கன் ஓடிப்பெருவரை எடுத்த திண்தோள் பிறங்கிய முடிகள் இற்றுமருவி எம்பெருமான் என்ன மலர் அடி மெள்ள வாங்கித்திருஅருள் செய்தார் சேறைச் செந்நெறிச் செல்வனாரே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.