திருமுறை 4 · 4.072 · 10

திருவின்னம்பர்

அருளியவர்
திருநாவுக்கரசர்
பண்
திருநேரிசை
தலம்
இன்னம்பர்
நாடு
சோழநாடு காவிரி வடகரை

1

விண்ணவர் மகுட கோடி மிடைந்தசே வடியர் போலும்பெண்ணொரு பாகர் போலும் பேடலி யாணர் போலும்வண்ணமால் அயனுங் காணா மால்வரை எரியர் போலும்எண்ணுரு வநேகர் போலும் இன்னம்பர் ஈச னாரே.
சொற்பிரிப்பு
விண்ணவர் மகுட கோடி மிடைந்த சேவடியர் போலும்பெண் ஒரு பாகர் போலும் பேடு அலி ஆணர் போலும்வண்ணமால் அயனும் காணா மால் வரை எரியர் போலும்எண் உரு அநேகர் போலும் இன்னம்பர் ஈசனாரே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

2

பன்னிய மறையர் போலும் பாம்பரை யுடையர் போலுந்துன்னிய சடையர் போலுந் தூமதி மத்தர் போலும்மன்னிய மழுவர் போலும் மாதிடம் மகிழ்வர் போலும்என்னையும் உடையர் போலும் இன்னம்பர் ஈச னாரே.
சொற்பிரிப்பு
பன்னிய மறையர் போலும் பாம்பு அரை உடையர் போலும்துன்னிய சடையர் போலும் தூமதி மத்தர் போலும்மன்னிய மழுவர் போலும் மாது இடம் மகிழ்வர் போலும்என்னையும் உடையர் போலும் இன்னம்பர் ஈசனாரே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

3

மறியொரு கையர் போலும் மாதுமை யுடையர் போலும்பறிதலைப் பிறவி நீக்கிப் பணிகொள வல்லர் போலுஞ்செறிவுடை அங்க மாலை சேர்திரு வுருவர் போலும்எறிபுனற் சடையர் போலும் இன்னம்பர் ஈச னாரே.
சொற்பிரிப்பு
மறி ஒரு கையர் போலும் மாது உமை உடையர் போலும்பறிதலைப் பிறவி நீக்கிப் பணிகொள வல்லர் போலும்செறிவுடை அங்க மாலை சேர் திரு உருவர் போலும்எறி புனல் சடையர் போலும் இன்னம்பர் ஈசனாரே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

4

விடமலி கண்டர் போலும் வேள்வியை அழிப்பர் போலுங்கடவுநல் விடையர் போலுங் காலனைக் காய்வர் போலும்படமலி அரவர் போலும் பாய்புலித் தோலர் போலும்இடர்களைந் தருள்வர் போலும் இன்னம்பர் ஈச னாரே.
சொற்பிரிப்பு
விடம் மலி கண்டர் போலும் வேள்வியை அழிப்பர் போலும்கடவு நல் விடையர் போலும் காலனைக் காய்வர் போலும்படம் மலி அரவர் போலும் பாய்புலித் தோலர் போலும்இடர் களைந்து அருள்வர் போலும் இன்னம்பர் ஈசனாரே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

5

அளிமலர்க் கொன்றை துன்றும் அவிர்சடை யுடையர் போலுங்களிமயிற் சாய லோடுங் காமனை விழிப்பர் போலும்வெளிவளர் உருவர் போலும் வெண்பொடி யணிவர் போலும்எளியவர் அடியர்க் கென்றும் இன்னம்பர் ஈச னாரே.
சொற்பிரிப்பு
அளிமலர்க் கொன்றை துன்றும் அவிர்சடை உடையர் போலும்களிமயில் சாயலோடும் காமனை விழிப்பர் போலும்வெளிவளர் உருவர் போலும் வெண்பொடி அணிவர் போலும்எளியவர் அடியர்க்கு என்றும் இன்னம்பர் ஈசனாரே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

6

கணையமர் சிலையர் போலுங் கரியுரி உடையர் போலுந்துணையமர் பெண்ணர் போலுந் தூமணிக் குன்றர் போலும்அணையுடை அடியர் கூடி அன்பொடு மலர்கள் தூவும்இணையடி உடையர் போலும் இன்னம்பர் ஈச னாரே.
சொற்பிரிப்பு
கணை அமர் சிலையர் போலும் கரி உரி உடையர் போலும்துணை அமர் பெண்ணர் போலும் தூமணிக் குன்றர் போலும்அணை உடை அடியர் கூடி அன்பொடு மலர்கள் தூவும்இணையடி உடையர் போலும் இன்னம்பர் ஈசனாரே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

7

பொருப்பமர் புயத்தர் போலும் புனலணி சடையர் போலும்மருப்பிள வாமை தாங்கு மார்பில்வெண் ணூலர் போலும்உருத்திர மூர்த்தி போலும் உணர்விலார் புரங்கள் மூன்றும்எரித்திடு சிலையர் போலும் இன்னம்பர் ஈச னாரே.
சொற்பிரிப்பு
பொருப்பு அமர் புயத்தர் போலும் புனல் அணி சடையர் போலும்மருப்பு இள ஆமை தாங்கு மார்பில் வெண் நூலர் போலும்உருத்திர மூர்த்தி போலும் உணர்வு இலார் புரங்கள் மூன்றும்எரித்திடு சிலையர் போலும் இன்னம்பர் ஈசனாரே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

8

காடிடம் உடையர் போலுங் கடிகுரல் விளியர் போலும்வேடுரு வுடையர் போலும் வெண்மதிக் கொழுந்தர் போலுங்கோடலர் வன்னி தும்பை கொக்கிற கலர்ந்த கொன்றைஏடமர் சடையர் போலும் இன்னம்பர் ஈச னாரே.
சொற்பிரிப்பு
காடு இடம் உடையர் போலும் கடி குரல் விளியர் போலும்வேடு உரு உடையர் போலும் வெண்மதிக் கொழுந்தர் போலும்கோடு அலர் வன்னி தும்பை கொக்கு இறகு அலர்ந்த கொன்றைஏடு அமர் சடையர் போலும் இன்னம்பர் ஈசனாரே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

9

காறிடு விடத்தை யுண்ட கண்டரெண் டோ ளர் போலும்நீறுடை யுருவர் போலும் நினைப்பினை அரியர் போலும்பாறுடைத் தலைகை ஏந்திப் பலிதிரிந் துண்பர் போலும்ஏறுடைக் கொடியர் போலும் இன்னம்பர் ஈச னாரே.
சொற்பிரிப்பு
காறிடு விடத்தை உண்ட கண்டர் எண் தோளர் போலும்நீறுடை உருவர் போலும் நினைப்பினை அரியர் போலும்பாறுடைத் தலை கை ஏந்திப் பலி திரிந்து உண்பர் போலும்ஏறு உடைக் கொடியர் போலும் இன்னம்பர் ஈசனாரே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

10

ஆர்த்தெழு மிலங்கைக் கோனை அருவரை அடர்ப்பர் போலும்பார்த்தனோ டமர் பொருது படைகொடுத் தருள்வர் போலுந்தீர்த்தமாங் கங்கை தன்னைத் திருச்சடை வைப்பர் போலும்ஏத்தஏ ழுலகும் வைத்தார் இன்னம்பர் ஈச னாரே.
சொற்பிரிப்பு
ஆர்த்து எழும் இலங்கைக் கோனை அருவரை அடர்ப்பர் போலும்பார்த்தனோடு அமர் பொருது படைகொடுத்து அருள்வர் போலும்தீர்த்தமாம் கங்கை தன்னைத் திருச்சடை வைப்பர் போலும்ஏத்த ஏழ் உலகும் வைத்தார் இன்னம்பர் ஈசனாரே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.