திருமுறை 4 · 4.071 · 10

திருநாகைக்காரோணம்

அருளியவர்
திருநாவுக்கரசர்
பண்
திருநேரிசை
தலம்
நாகைக்காரோணம்
நாடு
சோழநாடு காவிரித் தென்கரை

1

மனைவிதாய் தந்தை மக்கள் மற்றுள சுற்ற மென்னும்வினையுளே விழுந்த ழுந்தி வேதனைக் கிடமா காதேகனையுமா கடல்சூழ் நாகை மன்னுகா ரோணத் தானைநினையுமா வல்லீ ராகில் உய்யலாம் நெஞ்சி னீரே.
சொற்பிரிப்பு
மனைவி தாய் தந்தை மக்கள் மற்றுள சுற்றம் என்னும்வினையுளே விழுந்து அழுந்தி வேதனைக்கு இடம் ஆகாதே,கனையும் மா கடல் சூழ் நாகை மன்னு காரோணத்தானைநினையுமா வல்லீர் ஆகில் உய்யலாம் நெஞ்சினீரே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

2

வையனை வைய முண்ட மாலங்கந் தோண்மேற் கொண்டசெய்யனைச் செய்ய போதிற் திசைமுகன் சிரமொன் றேந்துங்கையனைக் கடல்சூழ் நாகைக் காரோணங் கோயில் கொண்டஐயனை நினைந்த நெஞ்சே அம்மநாம் உய்ந்த வாறே.
சொற்பிரிப்பு
வையனை வையம் உண்ட மால் அங்கம் தோள்மேல் கொண்டசெய்யனைச் செய்ய போதில் திசைமுகன் சிரம் ஒன்று ஏந்தும்கையனைக் கடல்சூழ் நாகைக் காரோணம் கோயில் கொண்டஐயனை நினைந்த நெஞ்சே அம்ம நாம் உய்ந்தவாறே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

3

நிருத்தனை நிமலன் றன்னை நீணிலம் விண்ணின் மிக்கவிருத்தனை வேத வித்தை விளைபொருள் மூல மானகருத்தனைக் கடல்சூழ் நாகைக் காரோணங் கோயில் கொண்டஒருத்தனை உணர்த லால்நாம் உய்ந்தவா நெஞ்சி னீரே.
சொற்பிரிப்பு
நிருத்தனை நிமலன் தன்னை நீள் நிலம் விண்ணின் மிக்கவிருத்தனை வேத வித்தை விளைபொருள் மூலம் ஆனகருத்தனைக் கடல் சூழ் நாகைக் காரோணம் கோயில் கொண்டஒருத்தனை உணர்தலால் நாம் உய்ந்தவா நெஞ்சினீரே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

4

மண்டனை இரந்து கொண்ட மாயனோ டசுரர் வானோர்தெண்டிரை கடைய வந்த தீவிடந் தன்னை யுண்டகண்டனைக் கடல்சூழ் நாகைக் காரோணங் கோயில் கொண்டஅண்டனை நினைந்த நெஞ்சே அம்மநாம் உய்ந்த வாறே.
சொற்பிரிப்பு
மண் தனை இரந்து கொண்ட மாயனோடு அசுரர் வானோர்தெண்திரை கடைய வந்த தீ விடம் தன்னை உண்டகண்டனைக் கடல் சூழ் நாகைக் காரோணம் கோயில் கொண்டஅண்டனை நினைந்த நெஞ்சே அம்ம நாம் உய்ந்தவாறே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

5

நிறைபுனல் அணிந்த சென்னி நீணிலா அரவஞ் சூடிமறையொலி பாடி யாடல் மயானத்து மகிழ்ந்த மைந்தன்கறைமலி கடல்சூழ் நாகைக் காரோணங் கோயில் கொண்டஇறைவனை நாளு மேத்த இடும்பைபோய் இன்ப மாமே.
சொற்பிரிப்பு
நிறை புனல் அணிந்த சென்னி நீள்நிலா அரவம் சூடிமறைஒலி பாடி ஆடல் மயானத்து மகிழ்ந்த மைந்தன்கறைமலி கடல் சூழ் நாகைக் காரோணம் கோயில் கொண்டஇறைவனை நாளும் ஏத்த இடும்பை போய் இன்பம் ஆமே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

6

வெம்பனைக் கருங்கை யானை வெருவவன் றுரிவை போர்த்தகம்பனைக் காலற் காய்ந்த காலனை ஞால மேத்தும்உம்பனை உம்பர் கோனை நாகைக்கா ரோண மேயசெம்பொனை நினைந்த நெஞ்சே திண்ணம்நாம் உய்ந்த வாறே.
சொற்பிரிப்பு
வெம்பனைக் கருங்கை யானை வெருவ அன்று உரிவை போர்த்தகம்பனைக், காலற் காய்ந்த காலனை ஞாலம் ஏத்தும்உம்பனை உம்பர் கோனை நாகைக் காரோணம் மேயசெம்பொனை நினைந்த நெஞ்சே திண்ணம் நாம் உய்ந்தவாறே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

7

வெங்கடுங் கானத் தேழை தன்னொடும் வேட னாய்ச்சென்றங்கமர் மலைந்து பார்த்தற் கடுசரம் அருளி னானைமங்கைமார் ஆட லோவா மன்னுகா ரோணத் தானைக்கங்குலும் பகலுங் காணப் பெற்றுநாங் களித்த வாறே.
சொற்பிரிப்பு
வெங்கடுங் கானத்து ஏழை தன்னொடும் வேடனாய்ச் சென்றுஅங்கு அமர் மலைந்து பார்த்தற்கு அடு சரம் அருளினானைமங்கைமார் ஆடல் ஓவா மன்னு காரோணத்தானைக்கங்குலும் பகலும் காணப் பெற்று நாம் களித்தவாறே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

8

தெற்றினர் புரங்கள் மூன்றுந் தீயினில் விழவோ ரம்பால்செற்றவெஞ் சிலையர் வஞ்சர் சிந்தையுட் சேர்வி லாதார்கற்றவர் பயிலும் நாகைக் காரோணங் கருதி யேத்தப்பெற்றவர் பிறந்தார் மற்றுப் பிறந்தவர் பிறந்தி லாரே.
சொற்பிரிப்பு
தெற்றினர் புரங்கள் மூன்றும் தீயினில் விழ ஓர் அம்பால்செற்ற வெஞ் சிலையர் வஞ்சர் சிந்தையுள் சேர்வு இலாதார்கற்றவர் பயிலும் நாகைக் காரோணம் கருதி ஏத்தப்பெற்றவர் பிறந்தார் மற்றுப் பிறந்தவர் பிறந்திலாரே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

9 Unavailable

இந்தப் பாடல் மூலத்தில் கிடைக்கப்பெறவில்லை. பாடல் வரிகள் இங்கே சேர்க்கப்படவில்லை.

இப்பதிகத்தில் 9-ம் பாடல் கிடைக்கப்பெறவில்லை.
சொற்பிரிப்பு
பாடல் கிடைக்கப்பெறவில்லை

10

கருமலி கடல்சூழ் நாகைக் காரோணர் கமல பாதத்தொருவிரல் நுதிக்கு நில்லா தொண்டிறல் அரக்க னுக்கான்இருதிற மங்கை மாரோ டெம்பிரான் செம்பொ னாகந்திருவடி தரித்து நிற்கத் திண்ணம்நாம் உய்ந்த வாறே
சொற்பிரிப்பு
கருமலி கடல் சூழ் நாகைக் காரோணர் கமல பாதத்துஒருவிரல் நுதிக்கு நில்லாது ஒண்திறல் அரக்கன் உக்கான்இருதிற மங்கை மாரோடு எம்பிரான் செம்பொன் ஆகம்திருவடி தரித்து நிற்கத் திண்ணம் நாம் உய்ந்தவாறே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.