திருமுறை 4 · 4.070 · 10

திருநனிபள்ளி

அருளியவர்
திருநாவுக்கரசர்
பண்
திருநேரிசை
தலம்
நனிபள்ளி
நாடு
சோழநாடு காவிரித் தென்கரை

1

முற்றுணை யாயி னானை மூவர்க்கு முதல்வன் றன்னைச்சொற்றுணை ஆயி னானைச் சோதியை ஆத ரித்துஉற்றுணர்ந் துருகி யூறி உள்கசி வுடைய வர்க்குநற்றுணை யாவர் போலும் நனிபள்ளி அடிக ளாரே.
சொற்பிரிப்பு
முற்றுணை ஆயினானை மூவர்க்கும் முதல்வன் தன்னைச்சொற்றுணை ஆயினானைச் சோதியை ஆதரித்துஉற்று உணர்ந்து உருகி ஊறி உள் கசிவு உடையவர்க்குநற்றுணை ஆவர் போலும் நனிபள்ளி அடிகளாரே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

2

புலர்ந்தகால் பூவும் நீருங் கொண்டடி போற்ற மாட்டாவலஞ்செய்து வாயின் நூலால் வட்டணைப் பந்தர் செய்தசிலந்தியை அரைய னாக்கிச் சீர்மைகள் அருள வல்லார்நலந்திகழ் சோலை சூழ்ந்த நனிபள்ளி அடிக ளாரே.
சொற்பிரிப்பு
புலர்ந்த கால் பூவும் நீரும் கொண்டு அடி போற்ற மாட்டாவலம் செய்து வாயின் நூலால் வட்டணைப் பந்தர் செய்தசிலந்தியை அரையன் ஆக்கிச் சீர்மைகள் அருள வல்லார்நலம் திகழ் சோலை சூழ்ந்த நனிபள்ளி அடிகளாரே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

3

எண்பதும் பத்தும் ஆறு மென்னுளே இருந்து மன்னிக்கண்பழக் கொன்று மின்றிக் கலக்கநான் அலக்க ழிந்தேன்செண்பகந் திகழும் புன்னை செழுந்திரட் குரவம் வேங்கைநண்புசெய் சோலை சூழ்ந்த நனிபள்ளி அடிக ளாரே.
சொற்பிரிப்பு
எண்பதும் பத்தும் ஆறும் என் உளே இருந்து மன்னிக்கண் பழக்கு ஒன்றும் இன்றிக் கலக்க நான் அலக்கழிந்தேன்செண்பகம் திகழும் புன்னை செழுந்திரள் குரவம் வேங்கைநண்பு செய் சோலை சூழ்ந்த நனிபள்ளி அடிகளாரே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

4

பண்ணினார் பாட லாகிப் பழத்தினில் இரத மாகிக்கண்ணினார் பார்வை யாகிக் கருத்தொடு கற்ப மாகிஎண்ணினார் எண்ண மாகி ஏழுல கனைத்து மாகிநண்ணினார் வினைகள் தீர்ப்பார் நனிபள்ளி அடிக ளாரே.
சொற்பிரிப்பு
பண்ணின் ஆர் பாடல் ஆகிப் பழத்தினில் இரதம் ஆகிக்கண்ணினார் பார்வை ஆகிக் கருத்தொடு கற்பம் ஆகிஎண்ணினார் எண்ணம் ஆகி ஏழ் உலகு அனைத்தும் ஆகிநண்ணினார் வினைகள் தீர்ப்பார் நனிபள்ளி அடிகளாரே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

5

துஞ்சிருள் காலை மாலை தொடர்ச்சியை மறந் திராதேஅஞ்செழுத் தோதின் நாளும் அரனடிக் கன்ப தாகும்வஞ்சனைப் பால்சோ றாக்கி வழக்கிலா அமணர் தந்தநஞ்சமு தாக்கு வித்தார் நனிபள்ளி அடிக ளாரே.
சொற்பிரிப்பு
துஞ்சு இருள் காலை மாலை தொடர்ச்சியை மறந்து இராதேஅஞ்சு எழுத்து ஓதில் நாளும் அரன் அடிக்கு அன்பு அது ஆகும்வஞ்சனைப் பால் சோறு ஆக்கி வழக்கு இலா அமணர் தந்தநஞ்சு அமுது ஆக்குவித்தார் நனிபள்ளி அடிகளாரே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

6

செம்மலர்க் கமலத் தோனுந் திருமுடி காண மாட்டான்அம்மலர்ப் பாதங் காண்பான் ஆழியான் அகழ்ந்துங் காணான்நின்மலன் என்றங் கேத்தும் நினைப்பினை அருளி நாளும்நம்மலம் அறுப்பர் போலும் நனிபள்ளி அடிக ளாரே.
சொற்பிரிப்பு
செம்மலர்க் கமலத்தோனும் திருமுடி காண மாட்டான்அம்மலர்ப் பாதம் காண்பான் ஆழியான் அகழ்ந்தும் காணான்நின்மலன் என்று அங்கு ஏத்தும் நினைப்பினை அருளி நாளும்நம்மலம் அறுப்பர் போலும் நனிபள்ளி அடிகளாரே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

7

அரவத்தால் வரையைச் சுற்றி அமரரோ டசுரர் கூடிஅரவித்துக் கடையத் தோன்றும் ஆலநஞ் சமுதா வுண்டார்விரவித்தம் அடிய ராகி வீடிலாத் தொண்டர் தம்மைநரகத்தில் வீழ வொட்டார் நனிபள்ளி அடிக ளாரே.
சொற்பிரிப்பு
அரவத்தால் வரையைச் சுற்றி அமரரோடு அசுரர் கூடிஅரவித்துக் கடையத் தோன்றும் ஆலநஞ்சு அமுதா உண்டார்விரவித் தம் அடியர் ஆகி வீடிலாத் தொண்டர் தம்மைநரகத்தில் வீழ ஒட்டார் நனிபள்ளி அடிகளாரே.
உரை

அரவத்தால் வரையைச் சுற்றி having wound a serpent round the mountain (which was the churning rod) அமரரோடு அசுரர் கூடி the acurar joining with the immortals. அரவித்துக் கடைய churned with great noise. தோன்றும் ஆலநஞ்சு அமுதா உண்டார் consumed the poison by name ālam that rose in the ocean, as nectar. விரவித்தம் அடியர் ஆகி வீடு இலாத் தொண்டர் தம்மை நரகத்தில் வீழ ஒட்டார் நனிபள்ளி அடிகளார் Civaṉ in naṉipaḷḷi will not tolerate his devotees who do not leave him, having become his slaves cultivating intimacy with Civaṉ, to fall into hell.

8 Unavailable

இந்தப் பாடல் மூலத்தில் கிடைக்கப்பெறவில்லை. பாடல் வரிகள் இங்கே சேர்க்கப்படவில்லை.

மண்ணுளே திரியும் போது வருவன பலவுங் குற்றம்புண்ணுளே புரைபு ரையன் புழுப்பொதி பொள்ள லாக்கை----- ----- ----- -----இப்பதிகத்தில் 8-ம் செய்யுளின் பின்னிரண்டடிகள் கிடைக்கவில்லை.
சொற்பிரிப்பு
மண்ணுளே திரியும் போது வருவன பலவும் குற்றம்புண்ணுளே புரை புரையன் புழுப் பொதி பொள்ளல் ஆக்கை--------------------இப்பதிகத்தில் 8-ம் செய்யுளின் பின்னிரண்டடிகள் கிடைக்கவில்லை.

9 Unavailable

இந்தப் பாடல் மூலத்தில் கிடைக்கப்பெறவில்லை. பாடல் வரிகள் இங்கே சேர்க்கப்படவில்லை.

இப்பதிகத்தில் 9-ம் பாடல் கிடைக்கப்பெறவில்லை.
சொற்பிரிப்பு
பாடல் கிடைக்கப்பெறவில்லை

10

பத்துமோர் இரட்டி தோளான் பாரித்து மலையெ டுக்கப்பத்துமோர் இரட்டி தோள்கள் படருடம் படர வூன்றிப்பத்துவாய் கீதம் பாடப் பரிந்தவற் கருள்கொ டுத்தார்பத்தர்தாம் பரவி யேத்தும் நனிபள்ளிப் பரம னாரே.
சொற்பிரிப்பு
பத்தும் ஓர் இரட்டி தோளான் பாரித்து மலை எடுக்கப்பத்தும் ஓர் இரட்டி தோள்கள் படர் உடம்பு அடர ஊன்றிப்பத்து வாய் கீதம் பாடப் பரிந்து அவற்கு அருள் கொடுத்தார்பத்தர் தாம் பரவி ஏத்தும் நனிபள்ளிப் பரமனாரே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.