திருமுறை 4 · 4.069 · 10

திருக்கோவலூர்வீரட்டம்

அருளியவர்
திருநாவுக்கரசர்
பண்
திருநேரிசை
தலம்
கோவலூர் வீரட்டம்
நாடு
நடுநாடு

1

செத்தையேன் சிதம்ப நாயேன் செடியனேன் அழுக்குப் பாயும்பொத்தையே போற்றி நாளும் புகலிடம் அறிய மாட்டேன்எத்தைநான் பற்றி நிற்கேன் இருளற நோக்க மாட்டாக்கொத்தையேன் செய்வ தென்னே கோவல்வீ ரட்ட னீரே.
சொற்பிரிப்பு
செத்தையேன் சிதம்ப நாயேன் செடியனேன் அழுக்குப் பாயும்பொத்தையே போற்றி நாளும் புகலிடம் அறிய மாட்டேன்எத்தை நான் பற்றி நிற்கேன் இருள் அற நோக்க மாட்டாக்கொத்தையேன் செய்வது என்னே கோவல் வீரட்டனீரே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

2

தலைசுமந் திருகை நாற்றித் தரணிக்கே பொறைய தாகிநிலையிலா நெஞ்சந் தன்னுள் நித்தலும் ஐவர் வேண்டும்விலைகொடுத் தறுக்க மாட்டேன் வேண்டிற்றே வேண்டி எய்த்தேன்குலைகொள்மாங் கனிகள் சிந்தும் கோவல்வீ ரட்ட னீரே.
சொற்பிரிப்பு
தலை சுமந்து இருகை நாற்றித் தரணிக்கே பொறை அது ஆகிநிலை இலா நெஞ்சம் தன்னுள் நித்தலும் ஐவர் வேண்டும்விலை கொடுத்து அறுக்க மாட்டேன் வேண்டிற்றே வேண்டி எய்த்தேன்குலைகொள் மாங்கனிகள் சிந்தும் கோவல் வீரட்டனீரே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

3

வழித்தலைப் படவு மாட்டேன் வைகலுந் தூய்மை செய்துபழித்திலேன் பாச மற்றுப் பரமநான் பரவ மாட்டேன்இழித்திலேன் பிறவி தன்னை என்னினைந் திருக்க மாட்டேன்கொழித்துவந் தலைக்குந் தெண்ணீர்க் கோவல்வீ ரட்ட னீரே.
சொற்பிரிப்பு
வழித்தலைப் படவும் மாட்டேன் வைகலும் தூய்மை செய்துபழித்திலேன் பாசம் அற்றுப் பரம நான் பரவ மாட்டேன்இழித்திலேன் பிறவி தன்னை என் நினைந்து இருக்க மாட்டேன்கொழித்து வந்து அலைக்கும் தெண்நீர்க் கோவல் வீரட்டனீரே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

4

சாற்றுவர் ஐவர் வந்து சந்தித்த குடிமை வேண்டிக்காற்றுவர் கனலப் பேசிக் கண்செவி மூக்கு வாயுள்ஆற்றுவர் அலந்து போனேன் ஆதியை அறிவொன் றின்றிக்கூற்றுவர் வாயிற் பட்டேன் கோவல்வீ ரட்ட னீரே.
சொற்பிரிப்பு
சாற்றுவர் ஐவர் வந்து சந்தித்த குடிமை வேண்டிக்காற்றுவர் கனலப் பேசிக் கண்செவி மூக்கு வாயுள்ஆற்றுவர் அலந்து போனேன் ஆதியை அறிவு ஒன்று இன்றிக்கூற்றுவர் வாயில் பட்டேன் கோவல் வீரட்டனீரே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

5

தடுத்திலேன் ஐவர் தம்மைத் தத்துவத் துயர்வு நீர்மைப்படுத்திலேன் பரப்பு நோக்கிப் பன்மலர்ப் பாத முற்றஅடுத்திலேன் சிந்தை யார ஆர்வலித் தன்பு திண்ணங்கொடுத்திலேன் கொடிய வாநான் கோவல்வீ ரட்ட னீரே.
சொற்பிரிப்பு
தடுத்திலேன் ஐவர் தம்மைத் தத்துவத்து உயர்வு நீர்மைப்படுத்திலேன் பரப்பு நோக்கிப் பல்மலர்ப் பாதம் முற்றஅடுத்திலேன் சிந்தை ஆர ஆர்வலித்து அன்பு திண்ணம்கொடுத்திலேன் கொடியவா நான் கோவல் வீரட்டனீரே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

6

மாச்செய்த குரம்பை தன்னை மண்ணிடை மயக்க மெய்துநாச்செய்து நாலு மைந்தும் நல்லன வாய்தல் வைத்துக்காச்செய்த காயந் தன்னுள் நித்தலும் ஐவர் வந்துகோச்செய்து குமைக்க வாற்றேன் கோவல்வீ ரட்ட னீரே.
சொற்பிரிப்பு
மாச்செய்த குரம்பை தன்னை மண் இடை மயக்கம் எய்துநாச்செய்து நாலும் ஐந்தும் நல்லன வாய்தல் வைத்துக்காச்செய்த காயம் தன்னுள் நித்தலும் ஐவர் வந்துகோச்செய்து குமைக்க ஆற்றேன் கோவல் வீரட்டனீரே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

7

படைகள்போல் வினைகள் வந்து பற்றியென் பக்கல் நின்றும்விடகிலா வாத லாலே விகிர்தனை விரும்பி யேத்தும்இடையிலேன் என்செய் கேன்நான் இரப்பவர் தங்கட் கென்றுங்கொடையிலேன் கொள்வ தேநான் கோவல்வீ ரட்ட னீரே.
சொற்பிரிப்பு
படைகள்போல் வினைகள் வந்து பற்றி என் பக்கல் நின்றும்விடகிலா ஆதலாலேவிகிர்தனை விரும்பி ஏத்தும்இடைஇலேன் என் செய்கேன் நான் இரப்பவர் தங்கட்கு என்றும்கொடை இலேன் கொள்வதே நான் கோவல் வீரட்டனீரே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

8

பிச்சிலேன் பிறவி தன்னைப் பேதையேன் பிணக்க மென்னுந்துச்சுளே அழுந்தி வீழ்ந்து துயரமே இடும்பை தன்னுள்அச்சனாய் ஆதி மூர்த்திக் கன்பனாய் வாழ மாட்டாக்கொச்சையேன் செய்வ தென்னே கோவல்வீ ரட்ட னீரே.
சொற்பிரிப்பு
பிச்சிலேன் பிறவி தன்னைப் பேதையேன் பிணக்கம் என்னும்துச்சுளே அழுந்தி வீழ்ந்து துயரமே இடும்பை தன்னுள்அச்சனாய் ஆதி மூர்த்திக்கு அன்பனாய் வாழ மாட்டாக்கொச்சையேன் செய்வது என்னே கோவல் வீரட்டனீரே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

9

நிணத்திடை யாக்கை பேணி நியமஞ்செய் திருக்க மாட்டேன்மணத்திடை ஆட்டம் பேசி மக்களே சுற்ற மென்னுங்கணத்திடை ஆட்டப் பட்டுக் காதலால் உன்னைப் பேணுங்குணத்திடை வாழ மாட்டேன் கோவல்வீ ரட்ட னீரே.
சொற்பிரிப்பு
நிணத்திடை யாக்கை பேணி நியமம் செய்து இருக்க மாட்டேன்மணத்திடை ஆட்டம் பேசி மக்களே சுற்றம் என்னும்கணத்திடை ஆட்டப் பட்டுக் காதலால் உன்னைப் பேணும்குணத்திடை வாழ மாட்டேன் கோவல் வீரட்டனீரே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

10

விரிகடல் இலங்கைக் கோனை வியன்கயி லாயத் தின்கீழ்இருபது தோளும் பத்துச் சிரங்களும் நெரிய வூன்றிப்பரவிய பாடல் கேட்டுப் படைகொடுத் தருளிச் செய்தார்குரவொடு கோங்கு சூழ்ந்த கோவல்வீ ரட்ட னாரே.
சொற்பிரிப்பு
விரிகடல் இலங்கைக் கோனை வியன் கயிலாயத்தின் கீழ்இருபது தோளும் பத்துச் சிரங்களும் நெறிய ஊன்றிப்பரவிய பாடல் கேட்டுப் படைகொடுத்து அருளிச் செய்தார்குரவொடு கோங்கு சூழ்ந்த கோவல் வீரட்டனாரே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.