திருமுறை 4 · 4.068 · 10

திருவாலங்காடு

அருளியவர்
திருநாவுக்கரசர்
பண்
திருநேரிசை
தலம்
ஆலங்காடு
நாடு
தொண்டைநாடு

1

வெள்ளநீர்ச் சடையர் போலும் விரும்புவார்க் கெளியர் போலும்உள்ளுளே யுருகி நின்றங் குகப்பவர்க் கன்பர் போலுங்கள்ளமே வினைக ளெல்லாங் கரிசறுத் திடுவர் போலும்அள்ளலம் பழனை மேய ஆலங்காட் டடிக ளாரே.
சொற்பிரிப்பு
வெள்ள நீர்ச் சடையர் போலும் விரும்புவார்க்கு எளியர் போலும்உள்ளுளே உருகி நின்று அங்கு உகப்பவர்க்கு அன்பர் போலும்கள்ளமே வினைகள் எல்லாம் கரிசு அறுத்திடுவர் போலும்அள்ளல் அம் பழனை மேய ஆலங்காட்டு அடிகளாரே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

2

செந்தழ லுருவர் போலுஞ் சினவிடை யுடையர் போலும்வெந்தவெண் ணீறு கொண்டு மெய்க்கணிந் திடுவர் போலும்மந்தமாம் பொழிற் பழனை மல்கிய வள்ளல் போலும்அந்தமில் அடிகள் போலும் ஆலங்காட் டடிக ளாரே.
சொற்பிரிப்பு
செந்தழல் உருவர் போலும் சினவிடை உடையர் போலும்வெந்த வெண் நீறு கொண்டு மெய்க்கு அணிந்திடுவர் போலும்மந்தமாம் பொழில் பழனை மல்கிய வள்ளல் போலும்அந்தமில் அடிகள் போலும் ஆலங்காட்டு அடிகளாரே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

3

கண்ணினாற் காம வேளைக் கனலெழ விழிப்பர் போலும்எண்ணிலார் புரங்கள் மூன்று மெரியுணச் சிரிப்பர் போலும்பண்ணினார் முழவ மோவாப் பைம்பொழிற் பழனை மேயஅண்ணலார் எம்மை யாளும் ஆலங்காட் டடிக ளாரே.
சொற்பிரிப்பு
கண்ணினால் காம வேளைக் கனல் எழ விழிப்பர் போலும்எண்ணிலார் புரங்கள் மூன்றும் எரி உணச் சிரிப்பர் போலும்பண்ணினார் முழவம் ஓவாப் பைம்பொழில் பழனை மேயஅண்ணலார் எம்மை ஆளும் ஆலங்காட்டு அடிகளாரே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

4

காறிடு விடத்தை யுண்ட கண்டரெண் தோளர் போலுந்தூறிடு சுடலை தன்னிற் சுண்ணவெண் ணீற்றர் போலுங்கூறிடு முருவர் போலுங் குளிர்பொழிற் பழனை மேயஆறிடு சடையர் போலும் ஆலங்காட் டடிக ளாரே.
சொற்பிரிப்பு
காறிடு விடத்தை உண்ட கண்டர் எண் தோளர் போலும்தூறிடு சுடலை தன்னில் சுண்ண வெண் நீற்றர் போலும்கூறு இடும் உருவர் போலும் குளிர் பொழில் பழனை மேயஆறிடு சடையர் போலும் ஆலங்காட்டு அடிகளாரே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

5

பார்த்தனோ டமர் பொருது பத்திமை காண்பர் போலுங்கூர்த்தவா யம்பு கோத்துக் குணங்களை அறிவர் போலும்பேர்த்துமோ ராவ நாழி அம்போடுங் கொடுப்பர் போலுந்தீர்த்தமாம் பழனை மேய திருவாலங் காட னாரே.
சொற்பிரிப்பு
பார்த்தனோடு அமர் பொருது பத்திமை காண்பர் போலும்கூர்த்த வாய்அம்பு கோத்துக் குணங்களை அறிவர் போலும்பேர்த்தும் ஓர் ஆவ நாழி அம்போடும் கொடுப்பர் போலும்தீர்த்தம் ஆம் பழனை மேய திருஆலங் காடனாரே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

6

வீட்டினார் சுடுவெண் ணீறு மெய்க்கணிந் திடுவர் போலுங்காட்டில்நின் றாடல் பேணுங் கருத்தினை யுடையர் போலும்பாட்டினார் முழவ மோவாப் பைம்பொழிற் பழனை மேயார்ஆட்டினார் அரவந் தன்னை ஆலங்காட் டடிக ளாரே.
சொற்பிரிப்பு
வீட்டினார் சுடு வெண் நீறு மெய்க்கு அணிந்திடுவர் போலும்காட்டில் நின்று ஆடல் பேணும் கருத்தினை உடையர் போலும்பாட்டினார் முழவம் ஓவாப் பைம்பொழில் பழனை மேயார்ஆட்டினார் அரவம் தன்னை ஆலங்காட்டு அடிகளாரே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

7

தாளுடைச் செங்க மலத் தடங்கொள்சே வடியர் போலும்நாளுடைக் காலன் வீழ உதைசெய்த நம்பர் போலுங்கோளுடைப் பிறவி தீர்ப்பார் குளிர்பொழிற் பழனை மேயஆளுடை யண்ணல் போலும் ஆலங்காட் டடிக ளாரே.
சொற்பிரிப்பு
தாள் உடைச் செங்கமலத் தடங்கொள் சேவடியர் போலும்நாளுடைக் காலன் வீழ உதை செய்த நம்பர் போலும்கோளுடைப் பிறவி தீர்ப்பார் குளிர்பொழில் பழனை மேயஆளுடை அண்ணல் போலும் ஆலங்காட்டு அடிகளாரே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

8

கூடினார் உமைதன் னோடே குறிப்புடை வேடங் கொண்டுசூடினார் கங்கை யாளைச் சுவறிடு சடையர் போலும்பாடினார் சாம வேதம் பைம்பொழிற் பழனை மேயார்ஆடினார் காளி காண ஆலங்காட் டடிக ளாரே.
சொற்பிரிப்பு
கூடினார் உமை தன்னோடே குறிப்புடை வேடம் கொண்டுசூடினார் கங்கையாளைச் சுவறிடு சடையர் போலும்பாடினார் சாம வேதம் பைம்பொழில் பழனை மேயார்ஆடினார் காளி காண ஆலங்காட்டு அடிகளாரே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

9

வெற்றரைச் சமண ரோடு விலையுடைக் கூறை போர்க்கும்ஒற்றரைச் சொற்கள் கொள்ளார் குணங்களை உகப்பர் போலும்பெற்றமே உகந்தங் கேறும் பெருமையை யுடையர் போலும்அற்றங்கள் அறிவர் போலும் ஆலங்காட் டடிக ளாரே.
சொற்பிரிப்பு
வெற்று அரைச் சமணரோடு விலை உடைக் கூறை போர்க்கும்ஒற்றரைச் சொற்கள் கொள்ளார் குணங்களை உகப்பர் போலும்பெற்றமே உகந்து அங்கு ஏறும் பெருமையை உடையர் போலும்அற்றங்கள் அறிவர் போலும் ஆலங்காட்டு அடிகளாரே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

10

மத்தனாய் மலையெ டுத்த அரக்கனைக் கரத்தோ டொல்கஒத்தினார் திருவி ரலால் ஊன்றியிட் டருள்வர் போலும்பத்தர்தம் பாவந் தீர்க்கும் பைம்பொழிற் பழனை மேயஅத்தனார் நம்மை யாள்வார் ஆலங்காட் டடிக ளாரே.
சொற்பிரிப்பு
மத்தனாய் மலை எடுத்த அரக்கனைக் கரத்தோடு ஒல்கஒத்தினார் திருவிரலால் ஊன்றியிட்டு அருள்வர் போலும்பத்தர் தம் பாவம் தீர்க்கும் பைம்பொழில் பழனை மேயஅத்தனார் நம்மை ஆள்வார் ஆலங்காட்டு அடிகளாரே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.