திருமுறை 4 · 4.067 · 10

திருக்கொண்டீச்சரம்

அருளியவர்
திருநாவுக்கரசர்
பண்
திருநேரிசை
தலம்
கொண்டீச்சரம்
நாடு
சோழநாடு காவிரித் தென்கரை

1

வரைகிலேன் புலன்க ளைந்தும் வரைகிலாப் பிறவி மாயப்புரையிலே அடங்கி நின்று புறப்படும் வழியுங் காணேன்அரையிலே மிளிரு நாகத் தண்ணலே அஞ்ச லென்னாய்திரையுலாம் பழன வேலித் திருக்கொண்டீச் சரத்து ளானே.
சொற்பிரிப்பு
வரைகிலேன் புலன்கள் ஐந்தும் வரைகிலாப் பிறவி மாயப்புரையிலே அடங்கி நின்று புறப்படும் வழியும் காணேன்அரையிலே மிளிரும் நாகத்து அண்ணலே அஞ்சல் என்னாய்திரை உலாம் பழன வேலித் திருக்கொண்டீச் சுரத்துளானே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

2

தொண்டனேன் பிறந்து வாளா தொல்வினைக் குழியில் வீழ்ந்துபிண்டமே சுமந்து நைந்து பேர்வதோர் வழியுங் காணேன்அண்டனே அண்ட வாணா அறிவனே அஞ்ச லென்னாய்தெண்டிரைப் பழனஞ் சூழ்ந்த திருக்கொண்டீச் சரத்து ளானே.
சொற்பிரிப்பு
தொண்டனேன் பிறந்து வாளா தொல்வினைக் குழியில் வீழ்ந்துபிண்டமே சுமந்து நைந்து பேர்வது ஓர் வழியும் காணேன்அண்டனே அண்டவாணா அறிவனே அஞ்சல் என்னாய்தெண்திரைப் பழனம் சூழ்ந்த திருக்கொண்டீச் சுரத்துளானே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

3

கால்கொடுத் தெலும்பு மூட்டிக் கதிர்நரம் பாக்கை யார்த்துத்தோலுடுத் துதிர மட்டித் தொகுமயிர் மேய்ந்த கூரைஓலெடுத் துழைஞர் கூடி ஒளிப்பதற் கஞ்சு கின்றேன்சேலுடைப் பழனஞ் சூழ்ந்த திருக்கொண்டீச் சரத்து ளானே.
சொற்பிரிப்பு
கால் கொடுத்து எலும்பு மூட்டிக் கதிர் நரம்பு ஆக்கை ஆர்த்துத்தோல் உடுத்து உதிரம் அட்டித் தொகு மயிர் மேய்ந்த கூரைஓல் எடுத்து உழைஞர் கூடி ஒளிப்பதற்கு அஞ்சுகின்றேன்சேல் உடைப் பழனம் சூழ்ந்த திருக்கொண்டீச் சுரத்துளானே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

4

கூட்டமாய் ஐவர் வந்து கொடுந்தொழிற் குணத்த ராகிஆட்டுவார்க் காற்ற கில்லேன் ஆடர வசைத்த கோவேகாட்டிடை யரங்க மாக ஆடிய கடவு ளேயோசேட்டிரும் பழன வேலித் திருக்கொண்டீச் சரத்து ளானே.
சொற்பிரிப்பு
கூட்டமாய் ஐவர் வந்து கொடுந்தொழில் குணத்தர் ஆகிஆட்டுவார்க்கு ஆற்றகில்லேன் ஆடு அரவு அசைத்த கோவேகாட்டிடை அரங்கம் ஆக ஆடிய கடவுளே ஓசேட்டுஇரும் பழன வேலித் திருக்கொண்டீச் சுரத்துளானே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

5

பொக்கமாய் நின்ற பொல்லாப் புழுமிடை முடைகொள் ஆக்கைதொக்குநின் றைவர் தொண்ணூற் றறுவருந் துயக்க மெய்தமிக்குநின் றிவர்கள் செய்யும் வேதனைக் கலந்து போனேன்செக்கரே திகழும் மேனித் திருக்கொண்டீச் சரத்து ளானே.
சொற்பிரிப்பு
பொக்கமாய் நின்ற பொல்லாப் புழு மிடை முடைகொள் ஆக்கைதொக்கு நின்று ஐவர் தொண்ணூற்று அறுவரும் துயக்கம் எய்தமிக்கு நின்று இவர்கள் செய்யும் வேதனைக்கு அலந்து போனேன்செக்கரே திகழும் மேனித் திருக்கொண்டீச் சுரத்துளானே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

6

ஊனுலா முடைகொள் ஆக்கை உடைகல மாவ தென்றும்மானுலா மழைக்க ணார்தம் வாழ்க்கையை மெய்யென் றெண்ணிநானெலா மினைய கால நண்ணிலேன் எண்ண மில்லேன்தேனுலாம் பொழில்கள் சூழ்ந்த திருக்கொண்டீச் சரத்து ளானே.
சொற்பிரிப்பு
ஊன் உலாம் முடை கொள் ஆக்கை உடைகலம் ஆவது என்றும்மான் உலாம் மழைக்கணார் தம் வாழ்க்கையை மெய் என்று எண்ணிநான் எலாம் இனைய காலம் நண்ணிலேன் எண்ணம் இல்லேன்தேன் உலாம் பொழில்கள் சூழ்ந்த திருக்கொண்டீச் சுரத்துளானே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

7

சாணிரு மடங்கு நீண்ட சழக்குடைப் பதிக்கு நாதர்வாணிகர் ஐவர் தொண்ணூற் றறுவரும் மயக்கஞ் செய்துபேணிய பதியின் நின்று பெயரும்போ தறிய மாட்டேன்சேணுயர் மாட நீடு திருக்கொண்டீச் சரத்து ளானே.
சொற்பிரிப்பு
சாண் இரு மடங்கு நீண்ட சழக்குடைப் பதிக்கு நாதர்வாணிகர் ஐவர் தொண்ணூற்று அறுவரும் மயக்கம் செய்துபேணிய பதியின் நின்று பெயரும் போது அறிய மாட்டேன்சேண் உயர் மாடம் நீடு திருக்கொண்டீச் சுரத்துளானே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

8

பொய்ம்மறித் தியற்றி வைத்துப் புலால்கமழ் பண்டம் பெய்துபைம்மறித் தியற்றி யன்ன பாங்கிலாக் குரம்பை நின்றுகைம்மறித் தனைய வாவி கழியும்போ தறிய மாட்டேன்செந்நெறிச் செலவு காணேன் திருக்கொண்டீச் சரத்து ளானே.
சொற்பிரிப்பு
பொய்ம் மறித்து இயற்றி வைத்துப் புலால் கமழ் பண்டம் பெய்துபைம் மறித்து இயற்றி யன்ன பாங்கிலாக் குரம்பை நின்றுகைம்மறித் தனைய ஆவி கழியும்போது அறிய மாட்டேன்செந்நெறிச் செலவு காணேன் திருக்கொண்டீச் சுரத்துளானே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

9

பாலனாய்க் கழிந்த நாளும் பனிமலர்க் கோதை மார்தம்மேலனாய்க் கழிந்த நாளும் மெலிவொடு மூப்பு வந்துகோலனாய்க் கழிந்த நாளுங் குறிக்கோளி லாது கெட்டேன்சேலுலாம் பழன வேலித் திருக்கொண்டீச் சரத்து ளானே.
சொற்பிரிப்பு
பாலனாய்க் கழிந்த நாளும் பனிமலர்க் கோதைமார் தம்மேலனாய்க் கழிந்த நாளும் மெலிவொடு மூப்பு வந்துகோலனாய்க் கழிந்த நாளும் குறிக்கோள் இலாது கெட்டேன்சேல் உலாம் பழன வேலித் திருக்கொண்டீச் சுரத்துளானே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

10

விரைதரு கருமென் கூந்தல் விளங்கிழை வேலொண் கண்ணாள்வெருவர இலங்கைக் கோமான் விலங்கலை எடுத்த ஞான்றுபருவரை யனைய தோளும் முடிகளும் பாறி வீழத்திருவிர லூன்றி னானே திருக்கொண்டீச் சரத்து ளானே.
சொற்பிரிப்பு
விரை தரு கருமென் கூந்தல் விளங்கு இழை வேல் ஒண் கண்ணாள்வெருவர இலங்கைக் கோமான் விலங்கலை எடுத்த ஞான்றுபருவரை அனைய தோளும் முடிகளும் பாறி வீழத்திருவிரல் ஊன்றினானே திருக்கொண்டீச் சுரத்துளானே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.