1
கச்சைசேர் அரவர் போலுங் கறையணி மிடற்றர் போலும்பிச்சைகொண் டுண்பர் போலும் பேரரு ளாளர் போலும்இச்சையால் மலர்கள் தூவி இரவொடு பகலுந் தம்மைநச்சுவார்க் கினியர் போலும் நாகஈச் சரவ னாரே.
சொற்பிரிப்பு
கச்சை சேர் அரவர் போலும் கறை அணி மிடற்றர் போலும்பிச்சை கொண்டு உண்பர் போலும் பேரருளாளர் போலும்இச்சையால் மலர்கள் தூவி இரவொடு பகலும் தம்மைநச்சுவார்க்கு இனியர் போலும் நாக ஈச்சுரவனாரே.
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.